
அரச்சலூர் இசை கல்வெட்டு உலகின் முதல் இசைக் கல்வெட்டு - அறச்சலூர் இசைக்கல்வெட்டு அறச்சலூர் இசைக்கல்வெட்டு, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் (சில இடங்களில் அரச்சலூர் எனவும் குறிப்பிடப்படுகிறது) என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் சிற்றூர். இவ்வூர் காங்கேயம் ஈரோடு சாலையில் இந்த சிற்றூர் அமையப்பட்டுள்ளது. கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்கள் செதுக்கப்பட்டவை. அறச்சலூர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு பாறைகள் நிறைந்திருக்கின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண ...