அரச்சலூர் இசை கல்வெட்டு 



உலகின் முதல் இசைக் கல்வெட்டு - அறச்சலூர் இசைக்கல்வெட்டு   


அறச்சலூர் இசைக்கல்வெட்டு, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் (சில இடங்களில் அரச்சலூர் எனவும் குறிப்பிடப்படுகிறது) என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது.


ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் சிற்றூர். இவ்வூர் காங்கேயம் ஈரோடு சாலையில் இந்த சிற்றூர் அமையப்பட்டுள்ளது. 


கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்கள் செதுக்கப்பட்டவை.


அறச்சலூர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு பாறைகள் நிறைந்திருக்கின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்ததற்கான சான்றாக காணப்படும் சற்றே சிதைந்த நிலையிலான கற்படுக்கைகளையும் இந்த குகைப்பகுதிக்கு முன்னே உள்ள பாறையில் காண முடிகின்றது.


குகைப்பாறையில் ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும் ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் இந்த இசைக்கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன.


 கல்வெட்டுகளில் பொதுவாக பின்வரும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 

பறை, உடுக்கை, கறடிகை, காளம், காகளம், காசை, குடமுழா, குழல், கொட்டிமத்தளம், சகடை, சங்கு, செண்டை, சேகண்டிகை, சேமக்கலம், டமருகம், தட்டழி, தவில், தாரணி படகம், தாளம், திருச்சின்னம், திமிலை, நகரா, பஞ்சமுறை, பாரி நாயனம், மல்லாரி, மணி, முகராசு, மேளம், யாழ், வங்கியம், வீரமத்தளம்.


இந்த அரச்சலூர் இசைக் கல்வெட்டில் இரண்டு தொகுதிகளாக  அடவு எனப்படும் இசை, தாள எழுத்துகள் ஐந்து ஐந்து வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.


த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த


இந்த இசைக்கல்வெட்டுக்கு அருகில் மேலும் இரண்டு வரிகளிலான தமிழி கல்வெட்டு ஒன்றும் 


"எழுதும் புணருத்தான் மசிய்

வண்ணக்கன் தேவன் ஙாத்தன்" 


என வெட்டப்பட்டுள்ளது. அதாவது, மசி என்னும் ஊரைச் சேர்ந்த காசு பரிசோதகரான தேவன் ஙாத்தன் இங்கு எழுதப்பட வேண்டிய இசை எழுத்துக்களையும் தொகுத்தளித்தார் எனக்குறிப்பிடுகின்றது.


"எழுத்தும் புணருத்தான் மணிய்

வண்ணக்கன் தேவன் சாத்தன்"


என மற்றொருவர் விளக்கப்படி,  மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். 


இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார். அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர்.


சுமேரியக் களிமண்ணில் செய்யப்பட்ட `Lipit-Ishtar` தொடர்பான, 4000 ஆண்டுகளிற்கு முற்பட்ட சான்றினைக் கூறலாம் (Tunings for a hymn honoring the ruler Lipit-Ishtar). இது ஒரு Tune (ஒத்திசைவி) ஆகக் கொள்ளப்படுகின்றதே தவிர Music (இசை) ஆகவல்ல. ஒத்திசைவி என்பது இசையின் ஒரு குறுகிய வடிவமே (A "tune" to be a short section of music, usually containing harmony and possibly multiple melodies) சுமேரிய மொழி இன்னமும் முழுமையாகப் படித்தறிய முடியாத மொழி. மேலும் இன்று வழக்கிலில்லாத மொழி.


 அடுத்தாதகச் சொல்லப்படும் “ Hurrian Hymn No. 6” என்பதும் ஒரு மெட்டு வடிவமே (Melody) , முழு இசையல்ல. முழு இசை வடிவத்திலான சான்றாக (First ever music composition) கிரேக்கத்தினைச் சேர்ந்த “Seikilos Epitaph” என்பது குறிப்பிடப் படுகின்றது. இதன் காலம் (CE 2nd cent) பொது ஆண்டு 2ம் நூற்றாண்டாகும். 


 இதே காலப்பகுதியைச் (CE 2nd cent ) சேர்ந்த இசைக் கல்வெட்டுதான் அறச்சலூர்_இசைக்கல்வெட்டு.


கிபி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த சங்கரரின் சங்கீத ரத்னாகரம் நாட்டிய சாத்திரம் என்ற நூலுக்கு மான காலத்திற்கு இடையே சங்கீதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மனின் 7ம் நூற்றாண்டு காலத்தினைச் சேர்ந்த குடுமியான்மலை  இசைக் கல்வெட்டும் முதன்மையானது. ஏழு பகுதிகளாக உள்ள இந்த இசைக் கல்வெட்டில் முதல் பகுதியில் ஹரிகாம்போஜி ராகம், இரண்டாம் பகுதியில் கரகரப்பிரியா ராகம், மூன்றாவது நடனமாக்ரிய ராகம், நான்காவது பந்துவராளி ராகம், ஐந்தாவது அஹரி ராகம்,  ஆறாவது சங்கராபரணம் ராகம்,  ஏழாவது கல்யாணி ராகமும் என்று ஏழு கிரகத்திற்குரிய விதிகளை பற்றி தமிழில் அழகாக கல்வெட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. 


"பரிவாதினி" என்ற நரம்புக் கருவியின் பெயர் கிரந்த மொழி கல்வெட்டாக குடுமியான்மலை மற்றும் மலையடிப்பட்டியில் உள்ளது.


இந்த இசைக் குறிப்பினை வைத்து அந்தக் காலத்தில் சங்கீதம் பயில்பவர்கள் ராகங்களைப் பற்றி சிறப்பாக அறிந்து தெரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.


கர்நாடக இசை என்பதே தமிழிசையின் ஒரு வடிவம் தான்.


கரு+நாடு+அகம் தான் கருநாடகம்!


 

நுண்கலைகளின் கருவாக விளங்கிய நாட்டின், அதாவது, வேங்கடம் முதல் குமரி வரை உள்ள நிலப்பகுதியின் உட்பகுதிகளில், அதாவது, நாட்டுப்புறங்களில், தோன்றிய கலைகளில், இசையும் ஒன்று! இப்பகுதி முழுதுமே தமிழகம் என்பதால் அது தமிழிசை எனப்பட்டது! தமிழிசையே இப்போது தென்னிந்திய இசை என்றும் கர்நாடக சங்கீதம் என்றும் வழங்கப்படுகிறது.

-----------------------------------------------------------------------

https://www.facebook.com/Arachalurofficial/photos/1235690186618922


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02yhKSwi2CpdqC7RM2aRBFhZACkkhFkpyX9W37PF1ZCeCwvNbG1oPJ9463fcKfhZFRl&id=773309966190282&_rdr


https://jainism.tamilheritage.org/arachalur-isai-kalvettu/


http://namathu.blogspot.com/2021/02/blog-post_2.html 


https://www.seithipunal.com/tamilnadu/the-musical-stone-in-tamil-nadu

Comments

Popular posts from this blog

சீமான் வாழ்க்கைவரலாறு - ''யார் இந்த சீமான்?'' SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

VALLATTAM - வல்லாட்டம்