பழந்தமிழ் போர்வீரர்களின் அமைப்பு பழந்தமிழ் போர்வீரர்களின் உடை கருவிகள் அமைப்பு (கல்வெட்டு: தாராபுரம்) திருப்பூர் பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள் எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன
Posts
Showing posts from September, 2022