Posts

Showing posts from January, 2023

2000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டு முத்திரையும் மூவேந்தர்கள் உருவாக்கிய தமிழ்நாடும்

Image
தமிழ்நாடு எப்போது வந்தது? தமிழகம் என்பதே சரி....? பாரதி பாடிய பெயர் சங்க இலக்கியங்களில் உள்ள பெயர்... செல்லாது... செல்லாது அண்ணா முன்மொழிந்த பெயர்... செல்லாது செல்லாது... உங்களுக்கு ஒரு சில ஆதாரங்கள் தரட்டுமா? தமிழகமா? தமிழ்நாடா? இங்கே உறுத்துவது நாடு என்ற அங்கீகார சொல்தான்....  இந்திய நாட்டுக்குள் ஒரு நாடா? பிரதேசம் என்றாலும் நாடு என்றுதான் பொருள் எனவே மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், எல்லாம் "மத்தியபிர", "உத்திரபிர" என பெயர் மாற்ற வேண்டும்... ஆந்திரப் பிரதேசம் என்ன தக்காளி தொக்கா? அதையும் மாற்றவேண்டும்... ஜார்க்கண்ட் என்பதும் நாடு என்றுதான் பொருள்... கண்ட் என்றால் அவர்கள் தாய்மொழியான சந்தாளி மொழியில் நாடு என்றுதான் பொருள். எனவே "கண்ட்"  கட்... அட நம்ப பங்காளி கர்நாடகம்கூட இனி  கர்ர்ர்ர் மட்டும்தான்... நாடு ரிமூவ்... நாடு என்றால் நாடற்றவர்களுக்கு எரியதான்  செய்யும் என்று சீமான் பேசுகிறார்... ஒருவேளை உண்மைதானோ... ? கஷ்டப்பட்டு சமைத்த கத்தரிக்காய் கூட்டு, அடுப்பு சூட்டில் வேர்வைச்சொட்ட  ஆக்கப்பட்ட அரிசிசோறு,  பக்குவமாய் செய்த பருப்பு குழம்பு.. செய்து முடித்