2000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டு முத்திரையும் மூவேந்தர்கள் உருவாக்கிய தமிழ்நாடும்




தமிழ்நாடு எப்போது வந்தது?

தமிழகம் என்பதே சரி....?


பாரதி பாடிய பெயர்

சங்க இலக்கியங்களில் உள்ள பெயர்...


செல்லாது... செல்லாது


அண்ணா முன்மொழிந்த பெயர்...


செல்லாது செல்லாது...


உங்களுக்கு ஒரு சில ஆதாரங்கள் தரட்டுமா?


தமிழகமா? தமிழ்நாடா?


இங்கே உறுத்துவது நாடு என்ற அங்கீகார சொல்தான்.... 


இந்திய நாட்டுக்குள் ஒரு நாடா?


பிரதேசம் என்றாலும் நாடு என்றுதான் பொருள் எனவே மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், எல்லாம் "மத்தியபிர", "உத்திரபிர" என பெயர் மாற்ற வேண்டும்...


ஆந்திரப் பிரதேசம் என்ன தக்காளி தொக்கா? அதையும் மாற்றவேண்டும்...


ஜார்க்கண்ட் என்பதும் நாடு என்றுதான் பொருள்... கண்ட் என்றால் அவர்கள் தாய்மொழியான சந்தாளி மொழியில் நாடு என்றுதான் பொருள். எனவே "கண்ட்"  கட்...


அட நம்ப பங்காளி கர்நாடகம்கூட இனி  கர்ர்ர்ர் மட்டும்தான்... நாடு ரிமூவ்...


நாடு என்றால் நாடற்றவர்களுக்கு எரியதான்  செய்யும் என்று சீமான் பேசுகிறார்... ஒருவேளை உண்மைதானோ... ?


கஷ்டப்பட்டு சமைத்த கத்தரிக்காய் கூட்டு, அடுப்பு சூட்டில் வேர்வைச்சொட்ட  ஆக்கப்பட்ட அரிசிசோறு,  பக்குவமாய் செய்த பருப்பு குழம்பு.. செய்து முடித்து  சாப்பிட பரிமாறும்போது  சம்மந்தமே இல்லாதவர் வந்து மூன்றையும் பிசைந்து, குழைத்து, சிதைத்து "கூட்டாஞ்சோறு" என பெயரிட்டு... தானே கஷ்டப்பட்டு செய்ததை போல நயவஞ்சகமாக பேசுகின்றனர்... அடுப்புசூடே தெரியாதவர்கள்... மாநிலங்களை சிதைத்து ஒற்றை அதிகாரம் நோக்கி நகரும் அடுப்புசூடு தெரியாதவர்களுக்கு "நாடு" என்ற அங்கீகாரச் சொல் சுடுகிறது...


இந்த அங்கிகாரம் இப்போது வந்ததல்ல ஆர்.என்.ரவியின் மூதாதையர்கள்கூட அழைத்ததுதான்... ஆமாம் வடக்கன்ஸ்   2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு என்று அழைத்துவிட்டனர்... ஆச்சரியமாக உள்ளதா? இது வரலாற்று உண்மை.


சேரநாடு,சோழநாடு,பாண்டியநாடு என்றுதான் தமிழ்நாடு இருந்தது என்று கூறுபவர்களே! உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இந்திய துணைக்கண்டத்தில் மொழி அடிப்படையில் இனரீதியாக உருவான முதல் நாடே தமிழ்நாடுதான் !

அத்திகும்பா கல்வெட்டு - ஒரிசா 


ஒரிசாவில் கிமு150ஐ சேர்ந்த காரவேலன் என்ற ஒரிய மன்னனின் கல்வெட்டான "அத்திகும்பா கல்வெட்டில்" மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் ஒற்றுமையாக "தமிழ்நாடு" என்ற தமிழ்மொழி பேசும் நிலப்பரப்பை ஆண்டுள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் சேர,சோழ, பாண்டிய மூவேந்தர்கள் ஒற்றுமையை குறிக்க  "தமிழ்தேச சங்காத்தம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது( கல்வெட்டு வரி - 11). இதில் தமிழ்தேசம் என்பது தமிழ் பேசும் நிலப்பரப்பை உள்ளடக்கிய நாட்டை குறிக்கிறது(பார்க்க - அத்திகும்பா கல்வெட்டு ).இதில் சேர சோழ பாண்டிய நாடுகளும் அடங்கும்.இந்த கல்வெட்டு 2150 ஆண்டுகள் பழமையானது.

அத்திகும்பா கல்வெட்டு வரிகள்




தமிழ்நாடு என்று குறிப்பிட பிடிக்காத ரவி வகையராக்கள் "தமிழ்தேசம்" என்றுகூட பயன்படுத்தலாம்... நோ ப்ராப்ளம்.




மூவேந்தர் முத்திரை - கோவை போளுவாம்பட்டி


தமிழ்நாட்டிற்கென்று தனித்த சின்னம் அக்காலத்தில் இருந்துள்ளது. இதுவும் ஒரு ஆச்சரியமான தகவல்தான் காரணம், தமிழ்நாட்டுக்கென்று தனி கொடியை வடிவமைக்கும் நாம் எப்படி சேர சோழ பாண்டியர் சின்னங்களை சேர்த்து வரைகிறோமோ அதேபோல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூவேந்தர்கள் இலச்சினையோடுகூடிய தமிழ்நாட்டு சின்னமாக "மூவேந்தர் சின்னம்" இருந்துள்ளது.இது கோவை போளுவாம்பட்டி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது( பார்க்க - மூவேந்தர் முத்திரை - போளுவாம்பட்டி ).மூவேந்தர்கள் தங்களுக்குள் பினக்குடன் இருந்தாலும் அயலாரிடம் தமிழ்நாட்டிற்காக இணைந்து செயல்பட்டுள்ளனர்.சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் ''தமிழ் நாட்டுச் செழுவில் கயல் புலி மண் தலை ஏற்ற வரைக'' என்று குறிப்பிடுகிறது.


கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிற்றூரான போளுவாம்பட்டியில் தமிழ்நாட்டு அரசு சார்பில் நடைபெற்ற  அகழாய்வில் சுமார் இரண்டு மீட்டர் ஆழ குழியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் முத்திரைதான் இந்த மூவேந்தர் சின்னம் ஆகும்.இதில் "வர்மனக" என்று தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.இதற்கு மூவேந்தர்கள் வரம்புக்கு உட்பட்டது என்பது பொருள்.இதனை பற்றி தினமணி வெளியிட்ட செய்தியில் "இதில் சேர் சோழ பாண்டியர் முத்திரை ஒன்றுசேர அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இது ஒரு அரிய கண்டுபிடிப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்திகும்பா கல்வெட்டும், மூவேந்தர் முத்திரையும் தமிழ்நாடு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடு என்ற வரையரை பெற்றுள்ளதற்கான வரலாற்று சான்றாகும். இதுமட்டுமின்றி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.   


2000 ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் தமிழ்நாடு இருக்கிறது (சிலம்பு) , தமிழகம் இருக்கிறது (புறம்-168), தமிழ்வேலி இருக்கிறது (பரிபாடல்), தமிழ்நாட்டகம் இருக்கிறது (பரிபாடல்), தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கிறது (தொல்காப்பியம்- சிறப்புப்பாயிரம்), செந்தமிழ்நிலம்  இருக்கிறது(தொல்காப்பியம் எச்சவியல் 2), தமிழ்கெழுகூடல் இருக்கிறது(புறம்-58).


2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இத்தனை பெயர்கள் இருந்திருக்கிறது என்றால் தமிழ்நாட்டின் அரசியலின் மூப்பை தெரியாமல் பிதற்றுவது மூடத்தனம்.ரோம நாட்டிற்கு இரண்டு தூதுவர்களை ரோம மன்னன் அகஸ்டஸ் காலத்திலேயே (கிமு;45) அனுப்பிய நிலம் தமிழ்நாடு. 



Comments

Popular posts from this blog

சீமான் வாழ்க்கைவரலாறு - ''யார் இந்த சீமான்?'' SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

VALLATTAM - வல்லாட்டம்