Posts

Showing posts from December, 2023
 யவனர் வரலாறு கல்வெட்டில் யவனர்கள் -------------------------- யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார். யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர். யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில், &