யவனர் வரலாறு
கல்வெட்டில் யவனர்கள்
--------------------------
யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.
யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர்.
யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன.
அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில், 'காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரச பெருமானுடைய ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், யவன அரசனாகிய அண்டியகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இரு வகை மருத்துவ நிலையங்களாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சியில், 'தரும விஜயம் என்னும் அற வெற்றியே மாட்சி மிக்க அசோக மன்னரால் முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த அற வெற்றி நாட்டப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு கி.மு. 258-ல் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்திய தேசத்துக்கப்பால் வட மேற்குப் பக்கத்தில் உள்ள தேசமாக அறியப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் உஜ்ஜைனியில் நடந்த அகழ்வாய்வுகளில் யவனப் பெண்கள் அணியும் பல்வேறு அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வட மொழி இலக்கணம் வகுத்த பாணினி, யவனன் என்பதன் பெண்பாலாக யவனாணி என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். யவனர்கள் சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. யவனத் தச்சர் என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.
''மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை''
என மணிமேகலை கூறுவது யவனத் தச்சர்களின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.
யவனர்களுக்கு மிகவும் பிடித்தது மிளகு. அதை 'யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர்கள் கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.
'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியடு பெயரும்
வளம்கெழு முசிறி’
என, அகநானூறு கூறுவதை யவனர்களைப் பற்றிய சான்றாம்.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன், யவனர்கள் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்பாடுகள் கொண்டதுமான கிண்ணத்தில் அழகான பெண்கள் தேறல் எனும் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து யவனர் விற்பனை செய்த பொருட்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரிய வருகிறது.
இதுபோலவே அழகாக வடிவமைக்கப்பட்ட பாவை விளக்குகளை யவனர்கள் தமிழகத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர். இந்த பாவை விளக்குகள் மன்னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தன என்று நக்கீரர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேற்சட்டை, மத்திகை என்று அழைக்கப்படும் அரைக்கச்சை ஆகியவற்றை யவனர்கள் அணிந்திருந்தனர். வலிமையான உடல்வாகு உடையவர்கள். அவர்களின் தோற்றம் முரட்டுத்தனம் மிக்கது. தென்னிந்தியாவின் பல இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, மலபார் கடற்கரைப் பகுதிகளிலும் சோழமண்டலக் கரையிலும் வணிகம் செய்யவந்த யவனர்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை உருவாக்கித் தங்கியிருந்த செய்தியை பெரும்பாணாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோலவே, மதுரையின் புறஞ்சேரியில் ரோமானியர் குடியிருப்பு இருந்திருக்கிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. புதுவையின் அரிக்கமேடு, காஞ்சிபுரம், கரூர், கொடுங்கலூர் ஆகிய இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.
பாண்டி நாட்டு மன்னர்கள் தங்களது படைப் பிரிவில் யவனர்களையும் சேர்த்திருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையை யவன வீரர்கள் காவல் காத்துவந்ததை
'கடிமதில் வாயில் காவலிற் சிறந்து
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’
என, சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.
அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. புலிப் படைநடத்திவர யவனர்கள் உதவி செய்திருக்கின்றனர். படையெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்திருக்கின்றன. எதிரிகளின் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை வீசவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனர் என்ற குறிப்புகள் வரலாற்றில் இருக்கின்றன.
“சோனகர் யவனர்” என்பது திவாகரத்தாலும், பத்துப்பாட்டில் “யவனர்” என்னும் சொல் வருமிடமெல்லாம் நச்சினார்க்கினியர், “சோனகர்” என உரை கூறிப் போந்ததாலும் விளங்கத்தக்கது.
“பிற்காலத்தில் இச்சோனகர் எல்லாம் தம் பழைய தேசத்தவர் போலவே, இஸ்லாத்தை தழுவலாயினர். இது பற்றிய “யவனத் துருக்கர்” என்றார் அடியார்க்கு நல்லார்,” யவனர் என்ற இலக்கியப் பிரயோகம் இஸ்லாமிய அரேபியர்களைத் தான் சுட்டுவதாக மகாவித்வான் அவர்கள் மேலே கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப் பிடித்து, பின்புறமாக கைகளைக் கட்டி தலையில் நெய்யை ஊற்றினான் என்கிற தகவலை பதிவு செய்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன் யவனர்களை வென்று அவர் நாட்டை ஆண்டதாகவும் சங்க இலக்கியப்பாடல்கள் பேசிச்செல்கிறது. யவனர்களை வன்சொல் யவனர் என்று இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றார்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்கள், யவனர்களை மிலேச்சர்கள் என்றும், துருக்கியர்கள் என்றும் சொல்கிறார். மட்டுமன்றி, தமிழ் இலக்கியத்தில் அகநாநூறு (149/9), நெடுநெல்வாடை (101), புறநானுறு (56 / 18), முல்லைப்பாட்டு (61), மற்றும் பதிற்றுப் பத்து பதிகம் என பலப்பல தமிழ் இலக்கியங்களில் யவனர்கள் என்கிற பெயர் பயன்பாட்டில் இருந்துள்ளது.
2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர்கூட ஒரு இலக்கண உதாரணத்துக்கு, ‘படுத்துக்க கொண்டே உணவு சாப்பிடும் யவனர்’ என்று வசைபாடுகிறார்.
புராணங்களில் சத்திரியர்களான பகலவர்களுடன் காம்போஜர்கள், சகர்கள், யவனர், பரதர்கள் எனும் ஐந்து இனக்குழுக்களைச் சேர்த்து பாஞ்ச கணங்கள் என்று குறிப்பிடுகிறது.
யுக புராணத்தின் ஒரு பகுதியான கர்கி சங்கிதை இறுதி மௌரிய ஆட்சியாளனான பிருகத்ரதனின் ஆட்சியின்போது நடைபெற்ற யவனர்களின்(இந்தோ-கிரேக்கர்) படையெடுப்பைப் பற்றியும் சகேதம் கைப்பற்றப்பட்டமை பற்றியும் குறிப்பிடுகிறது.
16வது நூற்றாண்டின் பாரசீக வரலாற்று ஆசிரியர் பிரிஷ்தாவின் கூற்றுபடி, யவனர்கள் எனப்படும் கிரேக்கர்களின் இந்திய படையெடுப்புகளுக்கு முன்னர், தில்லி நகரம் இராஜா தில்லு என்பவரால் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.
யவனர்கள் (இண்டோ-கிரேக்கர்கள்) செய்த இரண்டு பெளத்த கல்வெட்டுகள் சிவ்னேரியில் காணப்படுகின்றன.
யவனர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் நன்கொடைகளைப் பற்றிய தவல்கள் கர்லா குகைகள், பாண்டவர் குகைகள் மற்றும் மன்மோடி குகைகளிலும் காணப்படுகின்றன.
ஆசிரியர் பெயர் தெரிந்து கொள்ள இயலாத பல்சந்த மாலை பாடல் “... .... ... ஏழ் பெருந்தரங்கத்து யவனர், அல்லாவென வந்து ... .... ....” என, அல்லாவைத் தொழுகின்ற அரபியர், யவனர் என்பதை ஐயமற அறுதியிட்டுக் குறிப்பிடுகிறது.
இந்த யவனர் என்ற சொல்லின் பிரயோகம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியங்களில் மட்டும் காணப்படுவதாலும், இந்த நூலும், அந்த நூற்றாண்டை அல்லது அதற்கு அடுத்த நூற்றாண்டுகளைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். யவனர்கள் தங்கள் வீட்டுச் சாளரங்களுக்கு இட்ட மூடுதிரை போன்ற பட்டுத்திரை திருக்கோயில் கருவறைகளில பயன்படுத்தப்பட்டது. அதனைக் கல்வெட்டுக்கள் “யவனிகை” என குறிப்பிடுகின்றன.
இதேசொல், பின்னர் “நமனிகை” என்றுகூட வழக்கு பெற்றது. யமன் என்ற சொல் "நமன்" என்றால் போல, இவ்விதம், இஸ்லாமிய அரபிகள் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தங்களது இஸ்லாமிய வணிகச் சாத்துக்களைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆங்காங்கே நிலையான குடியேற்றங்களை அமைத்து தமிழ்ச்சமுதாயத்தின் தங்களது வளமையான வாணிபத்தில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டனர், என்பதும் தெளிவாகிறது.
களவியற் காரிகை (பதிப்பு - வையாபுரிப்பிள்ளை) 1945. பக்கம் 139.
HULTZCH. E. Dr — South Indian Inscription - Vol. II - Part. 1 (1891) p. 7. Ins. No. 6.
யவன இராச்சியக் கல்வெட்டு (Yavanarajya inscription), இதனை மகேரா கிணற்றுக் கல்வெட்டு என்றும் அழைப்பர். கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்மணற்கல்லால் ஆன இக்கல்வெட்டு பிராமி எழுத்துமுறையில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதி மக்களுக்கு, பிராமணர் ஒருவர் கிணறு மற்றும் குளம் வெட்டிக் கொடுத்ததைக் குறித்துள்ளது. இந்தியாவின் மதுராவிற்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகேரா எனும் ஊரின் கிணற்றின் அருகே 1988-இல் இக்கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இக்கல்வெட்டு மதுரா அருங்காட்சியகத்தில் உள்ளது.
கல்வெட்டின் மூலம் யவன இராச்சியத்தின் 116-வது ஆண்டு ஆட்சியின் போது, பண்டைய இந்தியாவின் மதுரா பகுதி யவனர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது எனத்தெரிகிறது. இந்தோ-கிரேக்க நாட்டை ஆண்ட யவனர்கள் ஆட்சியின் போது இல்கல்வெட்டு நிறுவப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
யவன உத்பவன்
--------------------
ஆந்திர மாநிலம் திராக்ஷராமில் இருக்கும் காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனின் சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று அவரை :-
"யவனோத்பவன்"
என்று குறிப்பிடுகிறது.
"யவனோத்பவன்" என்றால் "யவன உத்பவன்" என்பதாகும். அதாவது "யவன குலத்தில் உதித்தவன்" என்பதாகும்.
ஆந்திர மாநிலம் திரிபுராந்தகத்தில் இருக்கும், காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனின் சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று அவரை :-
"யவன சம்பவ க்ஷிதிபதி"
என்று குறிப்பிடுகிறது. "யவன சம்பவ க்ஷிதிபதி" என்றால் "யவன வம்சத்தில் தோன்றிய அரசன்" என்பதாகும். எனவே, இந்த அடிப்படை சான்றுகள், காடவர்களை (பல்லவர்களை) "யவன வம்சத்தவர்கள்" என்று குறிப்பிடுகின்றன. மேலும் "க்ஷிதிபதி" என்றால் "அரசன்" என்பதாகும். எனவே, "யவன சம்பவ ஷிதிபதி" என்றால் "யவன வம்சத்தில் தோன்றிய அரசன்" என்பதாகும். இது மிகச் சரியான முடிவாகும்.
இதன் மூலம் தெரியவரும் கருத்து என்னவென்றால், காடவர்களான பல்லவர்கள் "யவன வம்சத்தவர்கள்" ஆவர்
ஹோய்சாலர்களின் கன்னட கல்வெட்டுகளில் "காடவ குல அதியமான்" என்று குறிப்பிடப்பட்ட தகடூர் அதியமான்கள், திருவண்ணாமலை போளூர் அருகில் உள்ள சோழர் கால திருமலைக் கல்வெட்டில் "யவன வம்சத்தவர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர்.
பழைய வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சோழர் கால இரண்டு கல்வெட்டுகள், அதியமான்களை "சம்புவராய மரபினர்" என்று தெரிவிக்கின்றன.
காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்
------------------------------
ஆந்திர மாநிலம் திரிபுராந்தகத்தில் இருக்கும் சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் அவர்களை :-
"அவன் யவன சம்பவ க்ஷிதிபதி"
என்று குறிப்பிடுகிறது. "அவன் யவன சம்பவ க்ஷிதிபதி" என்றால், "அவன் யவன வம்சத்தில் தோன்றிய அரசன்" என்பதாகும். இந்த கருத்தை ஆந்திர மாநிலம் திராக்ஷராமம் சமஸ்கிருத கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது. அக் கல்வெட்டு காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் அவர்களை :-
"அவன் யவனோத்பவன்"
"கர்நாடக அதிப அவன் யவனோத்பவன்"
என்று குறிப்பிடுகின்றன. அதாவது, "அவன் யவன வம்சத்தில் தோன்றியன்" என்று குறிப்பிடுகின்றன. எனவே, காடவர்கள் என்பவர்கள் "யவன வம்சத்தவர்கள்" என்பது சான்றுகளின் மூலமாக தெரியவருகிறது.
இந்த கருத்தானது மிகச் சரியான கருத்து என்பதை, தகடூர் அதியமானின் திருமலை கல்வெட்டு (திருவண்ணாமலை போளூர் அருகில் இருக்கும் திருமலை) நமக்கு தெரிவிக்கிறது.
திருமலை கல்வெட்டு, அதியமான் விடுகாதழகிய பெருமாளை "சேர வம்சத்தவர்" என்றும் "தகடூரை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்தவர்" என்றும் தெரிவிக்கிறது. மேலும் அக் கல்வெட்டு அதியமான் விடுகாதழகிய பெருமாள் அவர்களை, "யவனிகா வம்சத்தைச் சேர்ந்த கேரள அரசன் ராஜ ராஜனின் மகன்" என்றும் தெரிவிக்கிறது..
இந்த "யவனிகா வம்சத்து கேரள அரசன்" என்பதை திருமலைக் கல்வெட்டின் தமிழ் பகுதியானது "வஞ்சியர் குலபதி எழினி" என்று தெரிவிக்கிறது. இதன் மூலமாக தெரியவரும் கருத்து என்னவென்றால், "யவன" என்பது தமிழில் "எழினி" என்று வழங்கப்பட்டிருக்கிறது என்பதாகும். சேர அரசர்கள் "எழினி ஆதன்" என்று குறிப்பிடப்பட்டனர் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன.
இந்த திருமலை கல்வெட்டு மிக மிக முக்கியமான கருத்தைப் பற்றி தெரிவிக்கிறது.
"சேர வம்சத்து தகடூர் அதியமான் விடுகாதழகிய பெருமாளின் தந்தையார், புகழ்மிகு ராஜ ராஜ அதியமான் அவர்கள், யவனிகா வம்சத்தின் மணிமகுடம் ஆவார்"
எனவே, சேர குல தகடூர் அதியமான் என்பவர்கள் "யவன வம்சத்தவர்கள்" என்பது உறுதியாகிறது. இந்த தகடூர் அதியமான்கள், ஹோய்சாலர்களின் கன்னட கல்வெட்டுகளில் மிகத் தெளிவாக "காடவ குல அதியமான்" என்று குறிப்பிடப்பட்டனர்.
சேர குல தகடூர் அதியமான்கள், காடவ குலத்தவர்கள் என்று தெரியவருவதால், இவர்களும் காடவர்களான பல்லவர்களும் "ஒரே தாயாதிகள்" என்பது உறுதியாகிறது. இதன் காரணத்தால் தான் காடவர்களும், அதியமான்களும் "யவன வம்சத்தவர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர் என்று தெரியவருகிறது.
யவனர் என்பவர்கள் பண்டைய மகாபாரத காலத்தில், இன்றைய மத்திய கிழக்கு ஆசியா மற்றும் கிரேக்க நாடுகளை அரசாட்சி செய்தவர்கள் என்று தெரியவருகிறது. ஹேஹேய அரச வம்சத்தவர்களும், யவனர் என்று குறிப்பிடப்பட்டதை சான்றுகள் தெரிவிக்கின்றன. கி.பி.8 ஆம் நூற்றாண்டின் பல்லவர் செப்பேடு ஒன்று, பல்லவ மன்னர் ஒருவரை "ஹேஹேய வம்சத்தவர்" என்றும் "ஆத்ரேய கோத்திரத்தைச்" சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கிறது.
சங்க கால சேரர்கள் மற்றும் அதியமான்கள் வெளியிட்ட காசுகளில், கிரேக்க மன்னர்கள் அணியும் தலைக்கிரீடம் இடம்பெற்றிப்பது என்பது, சேர குல அதியமான்கள் "யவன வம்சத்தைச்" சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது. அதியமான்களின் முன்னோர்கள் "நீரால் சூழப்பட்ட பகுதியில் இருந்து தமிழகம் வந்தவர்கள்" என்பதை சங்கத் தமிழ் புலவர் ஒளவையார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சங்கத் தமிழ் புறம் பாடலும் வேளிர் என்பவர்களை, வடபகுதியில் இருந்து தென்னகம் வந்தவர்கள் என்று தெரிவிக்கிறது.
எனவே, காடவர்களான பல்லவர்களும், அதியமான்களும் சிந்து சமவெளி மற்றும் மெசப்படோமியா போன்ற பகுதிகளில் இருந்து தென்னகத்திற்கு இடம்பெயர்ந்த "யவன வம்சத்தவர்கள்" என்பது உறுதியாகிறது.
தமிழகத்தில் யவனர் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுப்பு
நாகை அருகேயுள்ள கோயிலில் யவனர் குறித்து தமிழகத்தில் முதல் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
வணிகம் தொடர்பாக, குறிப்பாக சங்ககால வணிகர்களான யவனர்கள் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால், கல்வெட்டு ஆவணங்களில் யவனர் என்ற பெயர் தமிழகத்தில் எங்குமே கிடைக்கவில்லை. அசோகரின் கல்வெட்டுகளில் யவனர் பற்றிய குறிப்புகள் இருப்பது ஆய்வாளர்கள் அறிந்த ஒன்று.
தமிழகத்தில் பழந்தமிழ்க் கல்வெட்டுகளிலோ, பிந்தைய கால கல்வெட்டுகளிலோ இதுவரை யவனர் என்ற சொல் அல்லது பெயர் எந்த இடத்திலும் கிடைக்கவில்லை.
அண்மையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோயிலில் கி.பி. 1287 ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் யவனர் திடர் என்ற செய்தி கிடைக்கப் பெறுகிறது. இதைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை கள ஆய்வு செய்து கண்டறிந்தது.
"ஹரிஓம் ஸ்வஸ்திஸ்ரீ கோச்சட பன்பரான
திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர
பாண்டிய தேவர்க்கு ய த்தாவது ரிஷப
நாயற்று பூர்வபக்ஷ்த்து ........ செவ்வாய்
கிழமையும் பெற்ற விசாகத்து நாள்
ராசேந்திர சோழவளநாட்டு அளநாட்டு
பிரஹ்மதேயம் ஸ்ரீராஜராஜசதுவேதிமங்
கலத்து உடையார் ஸ்ரீ பார்த்தீஸ்வரமுடை
யார்......"
என்று கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் "ஸ்ரீகயிலாஸமுடையார் " என்ற பெயரும் "நரஸிம்ஹ ஈஸ்வரமுடையார் " என்ற பெயரும் இடம் பெருகிறது.
இந்த கல்வெட்டானது சுந்தர பாண்டிய மன்னரின் 10 ஆவது ஆட்சியாண்டில் இக்கோவிலுக்கு நிலம் தானம் கொடுக்கப்பட்டதையும் அதன் எல்லைகளையும் குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.
நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும் போது என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. யவனதிடர் என்பது யவனர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
இதன்மூலம் வாணிபம் செய்ய தமிழகம் வந்த யவனர்கள் இங்கே தங்கியிருந்தார்கள் என்று அறியமுடிகிறது.
தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாடுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான்.
யவனர் திடர் என்பது யவனர் திடல் என பொருள்படும். இது, யவனர்கள், குறிப்பாக மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
இக்கல்வெட்டில் யவனர் திடர் அமைந்திருந்த பகுதி பட்டினப்பெருவழிக்கு அருகில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக, இதில் குறிப்பிடப்படும் பட்டினம் என்பது கீழையூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சோழர்காலக் கடற்கரைத் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தைக் குறிப்பிடுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படும் யவனர் என்ற பெயர் பழந்தமிழ்க் கல்வெட்டில் காணப்படவில்லை. என்றாலும், கீழையூர் கோயில் கல்வெட்டின் மூலம் யவனர் என்ற சொல் பயன்பாடு, தொடர்ச்சியாக ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------
https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/22/தமிழகத்தில்-யவனர்-குறித்த-முதல்-கல்வெட்டு-கண்டெடுப்பு-3118517.html
https://www.heritagevembaru.in/2017/08/blog-post_31.html
https://groups.google.com/g/vallamai/c/x_r5ioJTEYU?pli=1
https://ta.glosbe.com/ta/en/யவனர்
https://www.facebook.com/nagaiheritage/photos/pcb.2627606154040616/2627605480707350
FB - Nagapattinam - Heritage City
• Gerhard Lüdtke (2009). Kurschners Deutscher Gelehrten-Kalender 2009, Vols 1-4. W. de Gruyter. பக். 2766.
• • Goyal, Shankar (2004) (in en). India's ancient past. Book Enclave. பக். 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 9788181520012.
• • History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007 pp. 254-255
• • "Some Newly Discovered Inscriptions from Mathura : The Meghera Well Stone Inscription of Yavanarajya Year 160 Recently a stone inscription was acquired in the Government Museum, Mathura." India's ancient past, Shankar Goyal Book Enclave, 2004, p.189
• Fussman, Gérard. The riddle of the ancient eras is not yet solved. பக். 242.
Comments
Post a Comment