Research of Mohenjo-daro, Harappa, Lothal and its result search for , Iranian(Ariyans) epicks, Indian(Dravidian) epicks in archaeology based evedance.
#சீமான்_வாழ்க்கை_வரலாறு யார் இந்த சீமான்? SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சீமான் பற்றிய
முழுமயான தகவல்கள்
1966 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற சிற்றூரில் திரு.செந்தமிழன், திருமதி.அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.இயற்பெயர் சீமான்.
சீமானின் வீடு - அரணையூர்
சீமானின் வீட்டு முற்றம்
அரணையூர் விளையாட்டுத்திடல்
வீட்டில் சீமானின் தாய்தந்தை
அரனையூரில் சீமான்....
அரனையூரில் சீமான்
தாயார் அன்னம்மாளுடன் சீமான்
சீமானின் குடும்பம் நிலமைக்காரர் (Nelamaikkarar caste) என்னும் சமூகத்தை சேர்ந்த விவசாய குடும்பம்.
அரணையூரில் தெருவோரத்தில் கத்தரிக்காய் விற்கும் சீமான் தாயார்
அரணையூர் பள்ளியில் படித்துவிட்டு, இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைமுடித்தார்.
.
1983-1986 ஆம் ஆண்டு இளையான்குடியிலுள்ள ஜாஹீர் உசேன் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
1993 முதலாக ராசாமகன் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினார் சீமான். கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்திருந்தார். கதாநாயகன் பெயர் "பிரபாகரன்" என்று வைத்திருந்தார். மேலும் தோழர் பாண்டியன் படத்தில் பணியாற்றினார்.
1994 ஆம் ஆண்டு ''அமைதிப்படை'' என்ற படத்தில் நடித்தார். இது இயக்குனர் மணிவண்னனால் இயக்கப்பட்டு நடிகர் சத்யராஜ் தலைவனாக நடித்து வெளிவந்த படம். 1987 ஆம் ஆண்டு விடுதலைபுலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே அமைதிஏற்படுத்த ''இந்திய அமைதிப்படை''(IPKF) என்ற படை இலங்கைக்கு சென்றது. அது இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, பின்னர் மூன்று ஆண்டுகளில் திருப்பியும் அணுப்பப்பட்டது. இந்த அமைதிப்படை என்ற பெயரிலேயே ஒரு நகைச்சுவைப்படத்தினை மணிவண்னன்இயக்கினார். இப்படத்தில் கருஞ்சட்டை அரசியல்வாதியாக சிறுவேடத்தில் சீமான் நடித்தார்.
அமைதிப்படை படத்தில் சீமான்
இப்படத்தின் இரண்டாம்பாகம் 2013 ஆம் ஆண்டு மணிவண்னனால் இயக்கப்பட்டது
இதில் சீமான் காட்டுக்குள் மக்களுக்காக புரட்சிசெய்யும் முக்கியவேடத்தில் நடித்தார்.
2013 சீமான் நடித்த ஒரு காட்சி
1997 ஆம் ஆண்டு கவிஞர் தாமரையை தனது படத்தின்மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சீமான்.பிறமொழி கலவாமல் தனித்தமிழில் பாடல்கள் எழுதி தமிழ்திரையுலகில் உச்சம் கண்ட கவிஞர். தாமரை அவர்கள் 1997 இல் சீமானின் ‘இனியவளே’ திரைப்படத்தில் ‘தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தகதோம்’ என்ற பாடலோடு தமது திரைப்படப் பாடல் பணியை தொடங்கினார். அப்போது எடுக்கப்பட்ட அரியபுகைப்படம். மேலும் தகவல்களுக்கு ; http://www.tamizhvalai.com/archives/15597
1995 - 2013 மணிவண்ணன் சீமானின் பதினெட்டு ஆண்டுகால நட்பு சினிமாதுறையில் குறைவு ஆனால் அரசியல் ரீதியாக இருவரும் மிகுந்த நெருக்கம் உடையவர்கள். மணிவண்ணனின் கல்லூரி நண்பரான சத்தியராஜ், மற்றும் நண்பர் சீமான், இருவரும் தமிழ்தேசிய கருத்தினை கொண்டவர்கள்.ஆனால் மணிவண்ணன் 2009 வரையிலாக திராவிடகருத்தியலை மட்டுமே ஆதரித்துவந்தார் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மூவருக்கும் இடையிலான நட்பு விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் வழுபெற்றது.
நாம் தமிழர் கட்சியில் மணிவண்ணன், சத்தியராஜ் இருவரும் பங்கெடுத்தனர். சீமானுடன் இணைந்து பல மேடைகளில் பல நாடுகளிலும் மணிவண்ணன் விடுதலைப்புலிகள் ஆதரவு பேச்சினை பேசியுள்ளார்.
மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்
மணிவண்ணன் உடல் புலிக்கொடியால் மூடப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது
1995 -ம் ஆண்டு வெளியான ''பசும்பொன்'' திரைப்படத்தின் கதை , வசனம் முழுவதும் சீமானால் எழுதப்பட்டு , பாரதிராஜாவால் இயக்கப்பட்டது.
1996 ம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.இப்படத்தின் கதாநாயகனுக்கு கிட்டான் (கிட்டு) என்றும் கதாபாத்திரங்களுக்கு பொட்டுகன்னி (பொட்டு அம்மான் ) என்றும் பெயரிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து 1998 ல் இனியவளே படத்தை இயக்கினார், இப்படத்தின் கதாநாயகனுக்கும் "பிரபாகரன்" என்று பெயர் வைத்திருந்தார். 1999ல் வீரநடை என்ற படத்தினை இயக்கினார்.வீரநடை படத்தின் மூலமாக சீமானின் நண்பரும் அறைத்தோழருமான கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகமானார். கவிதைகளை எழுதிவந்த நா.முத்துக்குமாரை திரைப்படபாடல் ஒன்றை எழுதச்சொல்லி தனது படத்தில் வாய்ப்பினை கொடுத்தார் சீமான். இன்றைய பாடலாசிரியர்களில் தனித்தமிழில் பாடல்களை இயற்றி சினிமாதுறையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் நா.முத்துக்குமார் ஆவார்.
1991 ஆம் ஆண்டு, தனது 25 வயது முதலே அரசியல் செயல்பாடும் , மேடைப்பேச்சுக்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.சீமானின் ஊரான அரணையூரிலிருந்து தேவிபட்டணம், மண்டபம் போன்ற ஈழ அகதிகள் தஞ்சம்புகுந்த இடங்கள் அருகாமையில் இருந்தபடியால் அகதிகளுடனான பழக்கங்கள் ஏற்பட்டன.
கல்லூரி பருவத்தில், மண்டபம் கடற்கரையிலிருந்து புலிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் டீசல் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் ஏதிலிகளின் நட்பின் மூலம் ஈழத்தின் நிலையினை அறிந்தார் . சிறுவயதில் இது சீமானின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைபற்றியும் ஆர்வம் காட்டினார்.
1994 ல் தஞ்சாவூர் கடற்கரையில் விடுதலை புலிகள் அமைப்பிற்கு தேவையான பொருட்களை கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கும் போது சீமானும் அவரின் தோழர்கள் இருவரும் காவல்துறையிடம் பிடிபட்டனர். மூவர் மீதும் பொய்வழக்கு போட்டு விசாரணையில் ஈடுபடுத்தி விடுவித்தனர்.இராஜிவ் காந்தி கொலைக்கும் பின்னான காலகட்டம் என்பதால் காவல்துறை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது சீமான் தமிழக காவல்துறையின் உடை அணிந்து திருட்டு செயலில் ஈடுபட்டதாக பொய் வழக்கும் பதிவு செய்தனர்.
1999 ம்ஆண்டு சீமானின் மேடைபேச்சு
1998 திராவிட இயக்கங்களில் இணைந்து பணியாற்றினார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட நாத்தீகராக செயல்பட்டார், சாதியத்தையும் பார்ப்பனீயத்தையும் வலுவாக எதிர்த்தார் . காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்.
1999 - 2001 விடுதலைப்புலிகள் சார்ந்து செயல்பட்டார்.
சீமான் யார்?
2002 ஏப்ரல் மாதம் இயக்குநர் பாரதிராஜா ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்தித்த போது சீமான் யார்? என்று பிரபாகரன் தன்னிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சீமான் பேசிய காணொளி துண்டுகளை பொட்டம்மான் எடுத்து காண்பித்ததாகவும் கூறியிருந்தார்.
இலங்கையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தான 'நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை'த் (CFA) தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைதிச் சூழல் நிலவியது.
முக்கிய நிகழ்வு: இதே காலப்பகுதியில், அதாவது ஏப்ரல் 10, 2002 அன்று கிளிநொச்சியில் பிரபாகரன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
பயணம்: அந்தச் சமாதானக் காலத்தில், பாரதிராஜா, இயக்குநர் மகேந்திரன் மற்றும் மணி ரத்னத்தின் உதவியாளர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு திரையுலகக் குழுவினர் வன்னிப் பகுதிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பாரதிராஜா ஈழப் போராட்டத்திற்கும் பிரபாகரனுக்கும் தனது மேடைகளில் வலுவான ஆதரவைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலி முற்றுகை பேரணி
2002 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகின் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, நெய்வேலி NLC யை முற்றுகையிட்டு கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் சீமான், அமீர், சேரன்,பாரதிராஜா போன்றோர் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் எனவே இப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என சுப்பிரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில்
நெய்வேலியை முற்றுகையிடும் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என ரஜினி வெளியிட்ட அறிக்கை அனலை கிளப்பியது.
பாரதிராஜாவின் பதிலடியால் ரஜினிக்கு எதிராக திரையுலகம் திரள ஆரம்பித்தது. ரஜினி ரசிகர்களே பல இடங்களில் அவருக்க எதிராகப் போராட்டங்களை நடத்தினர். ரஜினியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதை ரஜினியே எதிர்பார்க்கவில்லை
இந்த நிலையில் நெய்வேலி போராட்டம் தொடர்பாக பாரதிராஜாவும் ரஜினிகாந்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். ''காவிரி பிரச்னையில் கர்நாடகவுடன் நாங்கள் சண்டைக்கு நிற்கவில்லை. நம் எதிர்ப்பை தெரிவிக்கவே நெய்வேலி போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். காவிரி நீருக்காக விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், வியாபாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது. போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்" என ரஜினியிடம் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.
இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சங்க கூட்டத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் கூடி நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் லண்டனில் இருந்ததால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் ரஜினி, கமல், விஜய, அஜித், சத்யராஜ், பிரபு, கார்த்திக், வடிவேலு மனோரமா, ராதிகா, கோவை சரளா, ரேவதி, விந்தியா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். கன்னட நடிகர்களான அர்ஜூன், முரளி, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் கலந்து கொண்டனர். தனக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதால் நடிகர் சங்க கூட்டத்தில் ரஜினி பங்கேற்றார்.
கூட்டம் முடிந்த பிறகு, ''12-ம் தேதி நடைபெறும் நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சங்கமும் கலந்து கொள்ளும்'' என சரத்குமார் அறிவித்தார். ''கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமையுண்டு. அதன் அடிப்படையில்தான் ரஜினியும் கருத்து தெரிவித்தார். தற்போதுள்ள உணர்வுகளைப் புரிந்து கொண்டு நெய்வேலி போராட்டத்தில் அவர் பங்கேற்பார்'' என சொன்னார் சரத்குமார்..
ரஜினியும் மீடியாவிடம் பேசினார். ''காவிரி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். ஆனால், போராட்டத்தால் ரத்த ஆறு ஓடிவிடக் கூடாது என்பதே என் கருத்து. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன். எதனை செய்தாலும் ஒன்றாக இணைந்தே செய்வோம்.'' என்றார்.
''நெய்வேலி போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்படும்'' என ரஜினி சொல்லியிருந்த நிலையில் அவரின் சொற்களைத்தான் சுப்பிரமணியன் சுவாமியும் சொன்னார். ''விடுதலைப்புலி ஆதரவாளர்கள்தான் நெய்வேலி போராட்டத்தை நடத்த முயல்கிறார்கள். காஷ்மீரைப் போல தமிழ்நாட்டையும் தனி நாடாக்க நினைக்கிறார்கள். அதனால் தமிழ் திரையுலம் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. போராடுகிறவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.'' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
இப்படி போராட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் நெய்வேலியில் கூடுவோம். அரசியல் கட்சிகளின் கொடிகளை நெய்வேலி போராட்டத்தில் பயன்படுத்தக் கூடாது'' என அறிவித்தார் பாரதிராஜா.
''தமிழ்த் திரையுலக சகோதரர்களே கனத்த இதயத்தோடு நீதி கோர நெய்வேலிக்கு அழைக்கிறோம். தமிழ்த் திரை உலகின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நெய்வேலியில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளோம். எங்கள் கிளைகளும், பூக்களும் நகரங்களில் மணந்தாலும், வேர்கள் இன்னும் கிராமங்களில்தான் இருக்கின்றன.
எங்களை வாழ வைத்தவர்களை வாடி நிற்க வைத்துவிட்டு, தமிழனின் வாழ்க்கையையும் வயிற்றையும் கர்நாடக அரசு கருக விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நியாயம் கேட்கும் தமிழக அரசையும், தமிழக மக்களையும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் அடாவடியாகப் புறக்கணிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு, தமிழ் உணர்வின் அடிப்படையில் மட்டுமே, தமிழ்த் திரையுலகினரால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணியில், அரசியல் ரீதியான மாறுபட்ட உணர்வுகள் ஏதும் கலந்துவிடக் கூடாது. பேரணியில் கலந்து கொள்ளும் தமிழ்த் திரையுலகினர் கருப்பு பேட்ஜ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் சின்னங்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. தமிழர்கள் என்ற அடையாளத்தோடு மட்டும் அங்கு சங்கமிப்போம். முறையான வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மற்றும் பேனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.'' என சொல்லியிருந்தார் பாரதிராஜா.
போராட்டத்தின் போது பேசிய சீமான் சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசினார். காவிரியில் தமிழர்களின் உரிமையை பற்றியும் கர்நாடக அரசின் அடாவடி தனங்கள் பற்றியும் விவரித்தார். சீமான் பேசிய பேச்சு தமிழக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஈழ ஆதரவு பற்றியும் பிரபாகரன் பற்றியும் சீமான் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது.
புலிகளின் கொளத்தூர் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றார் .உந்து உருளியணியிலும் தொடர்ந்தார். கொளத்தூர்மணி திராவிட கொள்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலும் பழநெடுமாறனை தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவளித்து உதவிய உறுதியான மனிதர்களுள் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 50ம் அகவையை சிறப்பிக்க 2003 - ல் கஸ்ரோ தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகம் முடிவெடுத்து, அதன் கீழ் இயங்கிய ஈழமுரசு பத்திரிகை நிர்வாகத்திடம் அது ஒப்படைக்கப்பட்டது.
பிரபாகரன் விரும்பாத போதும் பேபி அண்ணா, யோகி அண்ணா, பாலகுமாரன் அண்ணா மூலமாக கஸ்ரோ அண்ணா தலைவருக்கு அழுத்தம் கொடுத்து சம்மதம் பெற்றார்.
மறைந்த ஈழப் போராட்ட முன்னோடியும் ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவருமான கவிஞர் கிபி அரவிந்தன் தலைமையில் நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. பிரபாகரன் ஒரே ஒரு நிபந்தனையுடன் இதற்கு உடன்பட்டார். வரலாற்று திரிபு வரக் கூடாது என்பதற்காக கட்டுரை எழுதுபவர்களின் முழு தகவல்களையும் பெற்றுக் கொண்டுதான் அனுமதித்தார்.
இதில் ஈழத்து ஆளுமைகள் மட்டுமல்ல சிங்கள, மேற்குலக, தமிழக ஆளுமைகள் பலரது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு பிரபாகரனுக்கு அனுப்பப்பட்டு பலரது பெயர்கள் நிராகரிக்கப்பட்டு வடிகட்டப்பட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த நூல் 2004 இல் வெளியிடப்பட்டது.அதில் சீமானது கட்டுரையும் ஒன்று. சீமானுடன் மணியரசன் ஐயா, நெடுமாறன் ஐயா, திருமாவளவன், தியாகு, இன்குலாப், மருது உட்பட பலரின் பதிவுகள் இடம்பெற்றிருந்தன. அந்த நூலில் சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிட்டிணன், விடுதலை இராஜேந்திரன், கி. வீரமணி உட்பட எவரின் பதிவும் இடம்பெறவில்லை. அது ஏன் என்று இன்று வரை மர்மமாகவே உள்ளது.
நிதர்சனத்தில் வெளிவந்த சீமானின் கட்டுரை
2004 நிதர்சனம் காணொளியில்
சீமானின் பேச்சு
2004 விடுதலைப்புலி பிரபாகரனின் 50-வது பிறந்தநாள் நிகழ்வு ''நிதர்சணம்'' காணொளியில் சீமான்
சீமான் விடுதலை புலிகள் சந்திப்பு
புலிகளின் பொறுப்பாளர்களுடன் சீமான்
2007 ம் ஆண்டு சீமான் தன் "வாழ்த்துகள்" திரைப்படத்தின் படப்பிடிப்பை இலங்கையின் கண்டி, நுவரெலியா பகுதியில் இயக்கினார். அப்போது விடுதலை புலிகள் அமைப்புடன் சீமான் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது கனடாவில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு சீமானை அனுப்ப தேசிய தலைவர் விரும்பியது குறித்து உரையாடப்பட்டது. புலிகளுடனான பேச்சுக்கள் முடித்து படப்பிடிப்பு களத்திலிருந்து சீமான் தமிழ்நாடு திரும்பினார்.
2006 ல் இவர் இயக்கிய ''தம்பி'' திரைப்படம் சிறப்பான வெற்றியை பெற்றது. தம்பி திரைப்படம் இளைஞர்களை எழுச்சியூட்டும் விதமான காட்சிகளை கொண்டிருந்தது . ''வன்முறை மீது விருப்பமற்ற ஒருவன் மீது, வன்முறை ஏவப்பட்டால் என்ன நடக்கும்'' என்பதை கதையின் கருவாக அமைத்திருந்தார். பிரபாகரனை ஈழத்தமிழர்கள் அழைக்கும் ''தம்பி'' என்ற பெயரை படத்திற்கும் , ''தம்பி வேலு'' என்ற பிரபாகரனின் பெயரையே (தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்) கதாநாயகனுக்கும் சூட்டியிருந்தார்.தனித்தமிழில் உரையமைத்த்தற்காக தமிழ்நாடு அரசின் ''சிறந்த உரையாசிரியர்'' விருது சீமானுக்கு கிடைத்தது.
2006 ஆம் ஆண்டு பெரியாரிய மேடைகளில் தமிழ்தேசிய அரசியலை பேசிவந்தார், குறிப்பாக விடுதலைப்புலி பிரபாகரனையும் மேடைதோரும் ஆதரித்து பேசினார்.கோக்,பெப்ஸி போன்ற அண்னியகுளிர்பான நிறுவனங்களை எதிர்த்து வந்தார்.2006 ஆம் ஆண்டைய உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்து பரப்புரை செய்தார்.
சீமான் பரப்புரைக்கான திமுக வின் அழைப்பிதழ்
வேல்முருகனுக்காக பரப்புரையில் சீமான் மற்றும் அறிவுமதி
2007 நவம்பர் 2-ல் இலங்கை அரசின் நச்சுக்குண்டு தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழ் செல்வனும் (பெயர் - சுப்பையா பரமு) , அவரது தனிச்செயலாளர் லெப்.கேணல் அன்புமணியும் (பெயர் - முத்துகுமார் சவுந்தரகிருஸ்ணன் / படத்தில் இரண்டாவதாக இருப்பவர்) மேலும் நான்கு புலிகளும், மூச்சுத்தினரி உயிரிழந்தனர் .மறைந்த அன்புமணியின் மனைவி யாழ்மதியை சீமான் திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .
செய்திவாசிக்கும் யாழ்மதி
2007 யாழ்மதி வன்னியில் தமிழ் தேசியக் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். சீமான், புலிகளின் ஆதரவு தலைவர்கள் மூலமாக பேசியும் யாழ்மதி மறுமணம் செய்துகொள்ள மறுத்து மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்துவிட்டு பிரான்ஸ் சென்றுவிட்டார்.
கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழ் வெளியீடு
2007ஜூலை 26 - சென்னை, அரசர் அண்ணாமலை மன்றத்தில் கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழ் வெளியிடப்பட்டது. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அவ்வரங்கில் மு.க.ஸ்டாலின் முதல் இதழை வெளியிட, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அதனைப் பெற்றுக் கொண்டார். கவிஞர் மு.மேத்தா, தென்கச்சி கோ. சுவாமிநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, சீமான், மும்பை அப்பாத்துரை ஆகியோர் இதழை வாழ்த்தி வரவேற்றுப் பேசினர். இதழின் ஆசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரை கூறினார். பொள்ளாச்சி உமாபதி வரவேற்புரையாற்ற, தமிழ் முழக்கம் சாகுல் அமீது நன்றியுரை கூற, எழுச்சியுடன் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளைக் கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசனும், அன்புத் தென்னரசனும் தொகுத்து வழங்கினர். கயல் தினகரன், இயக்குனர் செல்வபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
''எந்த மத நூலும், எந்த இதிகாசப் புராண நூலும் இந்த மனித இனத்தை படிக்கச் சொன்னதே கிடையாது. படிக்கச் சொன்னவன் என் முப்பாட்டன் திருவள்ளுவர்தான். அவர்தான் தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு ன்னு சொன்னான்''.
2007கனடாவில் தேசியத் தலைவரின் 53 ஆவது பிறந்த நாள் விழா: இயக்குநர் சீமான் பங்கேற்றார்.கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்திய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் சீீீமானை "ஈழமுரசு" குடும்பத்தினர் கனடாவில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
2008 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கன்னடர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 04.04.2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சத்தியராஜ்
''அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே - வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.''
இதனை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்
''.....நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... எல்லாம் விடுங்கள். கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்......''
- என்று ரஜினி பேசினார்
இந்த பிரச்சனைகளுக்கு காரணம், முன்னர் ரஜினி ஒருமுறை அளித்த பேட்டியே ஆகும்.எஸ்.பி.முத்துராமன் தயாரிப்பில் 1979 ஆம் ஆண்டு ரஜினி நடித்து கன்னடம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வெளியான பிரியா படத்தின் விவாதம் தொடர்பாக குமுதம் இதழில் ரஜினி ஸ்பெஷல் என்ற கட்டுரை வெளியானது இதில் பிடித்த பேச்சாளர் யாரென்று குமுதம் கேட்டகேள்விக்கு
'' பிடித்த பேச்சாளர் வாட்டாள் நாகராஜ். அவர் பேசுதை ரசித்துக்கேட்பேன். அதற்கு மேல் யோசிக்க மாட்டேன் ''
என்று ரஜினி பதிலளித்திருந்தார்.ரஜினி பிடிக்குமென்று சொன்ன வாட்டாள் நாகராஜு தமிழர்களை கர்நாடகாவில் தாக்கிஅடித்துக்கொண்டிருந்த கன்னடவெறியன். எல்லைப்பிரிப்பில் கொள்ளேகால், பெங்களூர், கோலார் போன்ற தமிழகத்திற்கு சொந்தமான பகுதியை கர்நாடகத்திடம் இழந்தபின்னரும் தாளவாடியை கர்நாடகத்துடன் இணைக்கும்படி இவன் போராட்டம் நடத்தியதை மா.பொ.சி தனது நூலில் விவரித்துள்ளார்.ஒக்கேனக்கல், காவிரி போன்ற பிரச்சனையில் தமிழர்களை முன்னின்று தாக்கிய அமைப்பு இவனுடைய கன்னட சாலுவாலி அமைப்பாகும்.தமிழ்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும்போது பிடிபட்டும் கைதுசெய்யாமல் பத்திரமாக அவனது வீடுவரைக்கும் கொண்டுசென்றுவிட்டது கலைஞர் கருணாநிதி ஆட்சியில்.
வாட்டாள் பேச்சுபிடிக்கும் என்று ரஜினி கூறியதை ரஜினி பேன்ஸ் http://www.rajinifans.com/history/part01.php இணையதளத்தில் முதல்முதலாக பதிவிட்டிருந்தனர். இந்த இணையதளம் படையப்பா’ படம் ரிலீஸ் ஆனபோது உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை இணைப்பதற்காக ஷாஜகான், நடராஜ், ராம்கி, சீனிவாசன் ஆகிய நான்கு கன்னட நடிகர்களால், அவர்களது சொந்தச் செலவில் தொடங்கப்பட்டது.2008 அம் ஆண்டு இந்த இணையதளத்தில் 12000 ரஜினிரசிகர்கள் இருந்தனர்.இந்த பிரச்சனையை தொடர்ந்து வட்டாள் நாகராஜ் பற்றிய செய்தி இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் நடித்துள்ள “அப்பு” படத்தின் 100வது நாள் விழா கடந்த 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெங்களூரில் நடந்தது.
அதில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த்தின் உரை விபரம் வருமாறு:
“வீரப்பன் மனிதனே அல்ல. அவன் ஒரு அரக்கன். அந்த அரக்கனை சம்ஹாரம் செய்யும் நேரம் வந்துவிட்டது. அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப் பிடித்து அழித்துக் கொல்ல வேண்டும்.
வீரப்பனைப் போன்றவர்களை விட்டு வைப்பது நாட்டுக்கு நல்லதல்ல. எவ்வளவு சீக்கிரம் அவனைக்கொல்கிறோமோ அது நல்லது. நடிகர் ராஜ்குமார் ஒரு மிகப் பெரிய மனிதர்.
அவரை காட்டுக்குள் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் எனக்குத்தூக்கம் இல்லை. அவரது வனவாசம் முடிந்துவிட்டது. இதுவரை கர்நாடக மக்களுக்கு மட்டுமே பரிச்சயமான ராஜ்குமார் இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்டார்.
ராஜ்குமாரை மீட்பதற்காக முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் மேற்கொண்ட முயற்சிகளை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்”
என்று கூறியவர் தான் ரஜினிகாந்த்.
ஒக்கேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக அரசு நடந்துகொண்டதால் கன்னடநடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியிருந்த நேரம் என்பதால் மக்கள் வீரப்பனுக்கு ஆதரவாக ரஜினிக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.
2. தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழ்திரையுலகினர் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கவேண்டும் என்று ரஜினி பேசியதற்கு குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடவிடாமல் வாட்டாள் போராட்டம் செய்ததால் கர்நாடகம் சென்று கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவந்தார் ரஜினி, இது தொடர்பாக குங்குமம் இதழில் சீமானின் பேட்டி வந்தது,
14.08.2008 குங்குமம் இதழில் சீமானின் பேட்டி
Add caption
சீமான் கருணாநிதி சந்திப்பு
2008 ஆம் ஆண்டு தன் படவெளியீடு தொடர்பாக அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார் சீமான்.
2008 இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் ஈழப்போரில் இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கு , எதிராக சீமான் பேசியபேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் சீமானின் பேச்சைக்கேட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சீமானுக்கு தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்பட்டது .சீமானின் மற்ற மேடைகளினின்று இந்த இராமேஸ்வர மேடை தனித்து காணப்பட்டதற்கு காரணம் தமிழ்நாட்டில் ''தமிழ்தேசியம்'' பிறந்துவிட்டதாக மேடையில் சீமான் முழங்கியதுதான். (இராமேஸவரம் உரை) இந்த பேச்சிற்காக காங்கிரஸ் - திமுக அரசால் கைதும் செய்யப்பட்டார். எதிர்க்கட்சியான ஆதிமுக-வும் சீமானை கைதுசெய்யும்படி சட்டமன்றத்தில் தனது எதிர்ப்பினை பதிவுசெய்தது.
சீமான் கைதும்! கடவுச்சீட்டு பறிப்பும்!
இராமேஸ்வர உரையை முடித்தபின் இராமநாதபுரம் Q- பிரிவு போலீசால் கைதுசெய்யப்பட்ட சீமான், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சீமானின் கடவுச்சீட்டு மற்றும் பிணைபத்திரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு 30.10.2008 ல் சீமான் விடுதலை செய்யப்பட்டார். இன்றுவரை சீமானின் கடவுச்சீட்டு திருப்பிதரப்படவில்லை. இதன்பின் வெளிநாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல், காணொளிகாட்சி மூலமே வெளிநாட்டுவாழ் தமிழரிடையே உரையாற்றுகிறார்.
2008 ஈரோட்டில் (14.12.2008) தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸார் குற்றம் சாட்டினர், இதனைத்தொடர்ந்து 19.12.2008 ல் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர்மணி ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டனர்
டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஈழத் தமிழர் ஆதரவுப் பொதுக் கூட்டத்தில், கொளத்தூர் மணி, சீமான், பெ. மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய அரசின் துரோகத்தையும், சிங்கள அரசின் இனப் படுகொலையையும் கண்டித்துப் பேசினர்.இதற்கு தமிழக காங்கிரசார், வழக்கம் போல் மிரட்டி அறிக்கைகள் வெளியிட்டனர். குறிப்பாக தமிழக காங்கிர தலைவர் தங்கபாலு, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். தங்கபாலு அறிக்கை வெளிவந்தவுடன், தமிழக காங்கிரசார் சிலர், சீமான் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைத்துவிட்டு, அருகே காங்கிரஸ் தலைவரான ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். காங்கிரசார் இப்படி வன்முறையைக் கையில் எடுத்த நிலையில் தமிழகம் முழுதும் கொந்தளிப்பு உருவானது.
கார் எரிப்பு செய்தி கிடைத்தவுடனேயே கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வத்தலகுண்டுக்கு அருகே ஜி.கல்லுப்பட்டி எனும் ஊரில் சீமானை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து மேட்டூரில் தனது இல்லத்தில் இருந்த கொளத்தூர் மணியையும், அடுத்த நாள் சென்னையிலிருந்த பெ.மணியரசனையும் காவல்துறை கைது செய்தது. ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தின் சிறப்பு போலீஸ்படை இக்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய தண்டனை சட்டம் 13-1(பி) மற்றும் 505 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஈரோடு கூட்டத்தில் சீமான், ராஜீவ் காந்திக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதாக மொடக்குறிச்சி காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறின.
2008 டிசம்பர் 18ம் தேதி சீமான் வீட்டு முன்பு நின்றிருந்த என்டீலர் காரின் பின் டயரை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்ட சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எரித்தனர்.சீமான் சார்பாக காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவரால் புகார்மனு ஒன்று அளிக்கப்பட்டது.
திமிங்கிலம் ஆழ ஆழ அது செல்கையில் உயர உயர எழுகிறது அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.
கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும். அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இனமானத்திற்கான கருத்தைப் பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர் விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானைக் காண புறப்பட்டபோது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலைத் தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர், பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார், இயக்குநர் அமீர் மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.
நான் சிறை வெளிவாயிலில் இருந்த வாயிற்காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன். மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்டபோது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலைபேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில், என்னைப் பேசச் சொல்லி அலைபேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார். மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்.
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலை நீடித்தது. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன. பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்துப் பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர். தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களைப் பெற்று என்னிடம் அளித்தார். தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும், வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து, அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களைத் தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானைப் பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம், எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை.. புத்தகங்கள் கொடுக்க கூடாது. வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார்.
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்.... அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் .. இனத்திற்காக, இன அழிவினைக் கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனைப் பார்த்து விடுவோம். மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்... எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன.
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இரும்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது. உள்ளே மங்கலான வெளிச்சம். வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில்.. வாருங்கள் வழக்கறிஞர்களே... என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ... என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ.. பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ.... மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ ... அதே குரல்...
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா. அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன. தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்.. தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார். நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்... இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன். ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம்.. பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்... சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ, அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ... இருக்க முடியவில்லை. மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து... எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப்பட்டு... மீறி எழும் இனமான உணர்வினையும்.. சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்... சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்... அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி... ஆதிச்சுழியாய்.. சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அண்ணனும் கலங்கி.. நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா.. எப்படியிருக்கார்.. திமுககாரர் .. அவரிடம் வம்பு வளர்க்காத.. பாவம்டா அவரு.. என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்.. அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா... தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை, கலங்குவதை கவனித்துக் கொண்டும், பதிவு செய்துக் கொண்டும் இருந்தன... நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன். விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்னபோது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களைப் பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னைப் பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள்... அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள். இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. .ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான். எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர். அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.
இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்.. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்டபோது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்த தாளை என்னிடம் அளித்து, கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார். நானும் அதை பெற்று மடித்த போது.. மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர். அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம். வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்கப் பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும், உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார். மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்.. நீங்கள் எங்களுக்கு வேண்டும்.. கொள்கையாய்.. வழிகாட்டியாய்.. ஆசானாய்.. உறவாய் என்றேன்.
கண்டிப்பாக.. என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர். மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்... ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?
விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்.... அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா? இந்த நாட்டில் துரோகி கருணாவைப் பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்.பி. தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே... தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே.. காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே... ஏனய்யா.. .உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது.. அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..? அவனின் உண்மையும், தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது? அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?
வண்டி கிளம்பியது. கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன். காற்று வேகமாக வீசியது.. அந்த காற்று.. .சிறை மதிற்சுவர்களை தாண்டியும் வீசும்.
2008 ல் போர்சுசூழலில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து வந்தார்.ஈழத்திற்கு வந்த சீமான் கிளிநொச்சியில் தங்க வைக்கப்பட்டார். தலைவருடனான சந்திப்பும் நடந்தது. போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு முன்னால் உரையாற்றும் வாய்ப்பும் சீமானுக்கு வழங்கப்பட்டது.கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் மண்டபத்தில் சீமான் உரையாற்றினார். தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் ஒப்பிட்டு சீமான் பேசினார். அன்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு எப்படியான போராட்டங்களை நடத்தினார் என்பதை விளக்கினார். தலைவர் பிரபாகரன் நடத்துகின்ற போராட்டம் பற்றி புகழ்ந்துரைத்தார்.மூன்று வாரங்கள் ஈழத்தில் தங்கிய சீமான் உரைகளை எல்லாம் கிளிநொச்சியில் நிகழ்த்தி விட்டு, தமிழ்நாடு திரும்பினார்.
சீமானின் ஈழப்பயணம் குறித்து திராவிட இயக்கங்கள் அவதூறு பேசிவந்தன. சீமான் ஈழம் செல்லவில்லை எனவும் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படங்கள் போலியானவை என்றும் கூறிவந்தனர். இதனை தொடர்ந்து 2025ல் விடுதலை புலிகள் இயக்கம் சீமானுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில் சீமானின் ஈழப்பயணம் உண்மை என குறிப்பிட்டிருந்தது
சீமானின் ஈழப்பயணம் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் கடைசி கட்டத்தில் சந்தோஷ் என்ற திராவிட இயக்க தோழரிடம் புலிகளால் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் சீமானிடம் கொடுக்காமல் பின்னாளில் அதற்கு விலை பேசியதாக கூறப்படுகிறது. சீமான் அதனை வாங்கவில்லை.
2009 கூட்டமொன்றில் பங்கேற்க சென்ற சீமானின் காரை காங்கிரஸ் கட்சியினர் இடித்து சேதப்படுத்தினர்.
தளபதி சூசையின் பேச்சு
2009 ல் இறுதிகட்ட போர்ச்சூழலில் தமிழர் அடைந்த துன்பங்களையும் இனவழிப்பை பற்றி புலிகளின் தளபதி சூசையின் தொலைபேசி செவ்வி உரையாடலில் புலிகளின் போராட்டத்தை சீமானை முன்னெடுக்கும்படி கூறினார்.
ஐந்துமுறை தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டார், அதில் இரன்டு முறை தேசியபாதுகாப்புச்சட்டத்தின் கீழ் காங்கிரஸ்- திமுக அரசால் கைது செய்யப்பட்டார்.
2009, மே மாதம் 18 -ம் நாள் மதுரையில் சீமான் தலைமையில் இளைஞர்களும் தமிழ் ஆர்வளர்களும் ஈழப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டும் இலங்கை இந்திய அரசை கண்டித்தும் ஒன்று கூடினர். இதே நாளில் ''நாம் தமிழர் இயக்கம்'' என்ற இளைஞர் இயக்கத்தை சீமான் மதுரையில் துவக்கினார். இது சி.ப.ஆதித்தனார் ஆரம்பித்த ''நாம்தமிழர் கட்சியின்'' தொடர்ச்சியே என்றார்.
மே18 முள்ளிவாய்க்கால் இன எழுச்சிநாள் நிணைவுக்கூடுகை அனுசரிப்பு
2009 மே 18ம் நாள் ஈழப்போர் முடிவிற்குவந்ததாகவும் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. முள்ளிவாய்காலில் அழித்தொழிக்கப்பட்ட தமிழர்களிக்காக முள்ளிவாய்க்கால் படுகொலைநாள் என்ற அந்த தமிழினத்தின் கருப்பு வரலாற்று பக்கத்தை உலகத்தமிழர்கள் கண்ணீரோடு பார்த்தநாள்.
2009 வரை அழித்தொழிக்கப்பட்ட 1.75லட்சம் தமிழர்களுக்கான நீதியும் மீதமுள்ள மூன்றறை லட்சம் தமிழர்கள் முள்வேளிகம்பிக்குள் அடைத்துவைக்கப்பட்டதையும் கண்டித்து
2009 மே 18ம் நாள் சீமான் தலைமையில் தமிழ் ஆர்வளர்களும் இளைஞர்களும் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்தனர் . இதில் ஈழத்தில் போரினால் இறந்த மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் வீரவணக்கம் செய்யப்பட்டது, போர் முடிவிற்கு வந்ததாக இலங்கை அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட போரில் உயிர்நீத்த மக்கள், மாவீரர் மற்றும் தளபதிகள் என அணைவரையும் நிணைவுகூற ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது. இதன்படி அறுத்தெறிவோம் வாரீர் என்ற பெயரில் மதுரையில் ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டது.
2009 அறுத்தெறிவோம் வாரீர் இன எழுச்சி நிணைவுக்கூடுகை - மதுரை
அறுத்தெறிவோம் வாரீர் கூடுகை - 2009 ஜூலை 18
2009 ஜூலை 18ம்நாள் மதுரையில் அறுத்தெறிவோம் வாரீர் என்ற மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டத்தையும் சீமான் முன்னெடுத்தார், ஆண்டுதோரும் உலகில்வாழும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையை மே18ம் நாள் ஆண்டுதோரும் நிணைகூறுவோம் என்றார்.
25-10-2009அன்று குடந்தையில் உடையாளூரில் உள்ள மாமன்னர் ராசராசசோழனின் நினைவிடத்தில் சீமான் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். நினைவிட சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் குடந்தை கிளை சார்பாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
2010 இன எழுச்சிநாள்
2010 மே18 இன எழுச்சி நாள் அனுசரிப்பிற்கு அழைப்பு விடுத்த சீமான்
2013 மே 18ம் தேதி தமிழ்நாட்டில் கடலூரில் இன் எழுச்சி கூட்டத்தில் காஷுமீரிய விடுதலை முன்னணி தலைவர் யாசின்மாலிக் கலந்துகொண்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2015 மே 18ம் தேதி இலங்கை வடக்குமாகாண அரசின் சார்பாக முதல்முறையாக முதலமைச்சர் விக்னேஷ்வரன் தலைமையில் இன எழுச்சிநாளை நிணைவுகூறப்பட்டது.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்நிகழ்வு நடைபெற்றது இதனைத்தொடர்ந்து இலங்கை அரசும் மே 18 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து இராணுவ அணிவகுப்புகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. போரில் இறந்த இலங்கைப் படைத்துறையினர் வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இந்நாளில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.ஆனாலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போரில் இறந்த அனைவரும் பெப்ரவரி 4 இல் நினைவுகூரப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும், அரசு அக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை.பதிலாக, இலங்கைத் தமிழர் இறந்த தமது உறவுகளை நினைவு கூர இலங்கை அரசு தடை விதித்தது.மே 18 ஐ ஒட்டிய நாட்களில், வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன
2016 இன எழுச்சிநாள்
முள்ளிவாய்கால் நிணைவேந்தல் - இலங்கை வடக்குமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 2016
2010 பிப்ரவரி 8ம் நாள் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. ''கருத்த தடித்த எருமைபோன்ற தமிழ்பெண்கள்''- என்று கூறிய மலையாள நடிகர் ஜெயராமன் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் தாக்கியதாக 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீமான் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது, இதை பற்றி தினமலர் நாளிதழில் வெளியான செய்தி.
2009 சுப.முத்துக்குமார் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்தார்; விடுதலைப்புலியும், சீமானின் நண்பருமான சுப.முத்துக்குமார் தனது திராவிட கருத்தியலுக்கு கட்டுப்பட்ட தமிழ்தேசியகொள்கையிலிருந்து வெளியேறி ஒற்றைத்தமிழ்தேசியகொள்கையை மட்டும் ஆதரித்து நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்தார்.
சீமான்
சுப.முத்துக்குமார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனால் தமிழகத்தில் 'தமிழ்த் தேசிய மீட்புப் படை’ என்ற அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவர் இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் பயிற்சிபெற்று
1989 - ஆம் ஆண்டு முதல் 1994 வரையிலான ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். பின்பு தமிழகம் வந்து தமிழ்த் தேசிய மீட்புப் படையின் அமைப்பை பலப்படுத்தினார் . பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தடா சட்டத்தில் சிறைக்கு சென்று, குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு சென்றார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் வழக்கில் சேர்க்கப்பட்டார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
சுப.முத்துக்குமாருடன் சீமான்
புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு வழியாக இலங்கைக்கு அனுப்பி வந்தார், ஒரு முறை இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொழுது சிலர் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை பொடா சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். பின்பு வெளியே வந்த பின்னரும் முத்துக்குமார், சீமானுடன் இணைந்து இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பிவைத்தனர். மருபடியும் காங்கிரஸ்- திமுக அரசின் அடக்குமுறையால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் திராவிடர் கழகம், திராவிட கட்சி என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, கட்சியை வலுப்படுத்தினார்.
அருவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட முத்துக்குமார்
சட்டமன்ற தேர்தல் 2011-ல் சுப.முத்துக்குமார் காங்கிரஸ் கட்சியின் நடுவன் அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டார்.இதனால் அவருக்கு வாக்குவங்கி வெகுவாக சரிந்தது, ஓட்டு எண்ணிக்கையில் சிதம்பரம் தோல்வி என்று ஊடகங்கள் அறிவித்த சில நிமிடங்களில் வெற்றியாக அறிவிக்கப்பட்டது , சிதம்பரம் நடுவன் அமைச்சராக தொடரவேண்டிய கட்டாயம் இருந்தபடியால்! . பின்னர் சுப.முத்துக்குமாரை அச்சுருத்திவந்த தி.மு.க - காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரை வெட்டி கொலைசெய்ததாக பெ.மணியரசன் குறிப்பிட்டார்
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை 15.02.2011 இரவு சுமார் 10.15 மணிக்கு புதுக்கோட்டை நகரின் மைய்யப் பகுதியான அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் என்ற பழங்கள் விற்கும் கடையில், பழங்கள் வாங்கிக் கொண்டு இருக்கையில் பின்புறமாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பலில் வயிற்றில் கத்தியை சொருகுகிறார் ஒருவர்.
நிலைமை என்னவென்று அறிவதற்குள் மற்றொருவர் பின்புற தலையை நோக்கி அரிவாளால் வெட்டுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவருடைய வக்கீல் தடுக்க முற்படும் போது அவரின் கையில் வெட்டு விழுகிறது. முகத்திலும் வெட்டு விழுகிறது. சுப.முத்துக்குமார் எந்த வித சுயநினைவும் இன்றி பழக்கடையின் மைய்யப் பகுதியில் குடல் சரிய விழுந்து உயிரை விடுகிறார். கடைக்காரர்கள் நிலை என்னவென்று அறிவதற்குள் இந்த கொலைகார கும்பல் காரில் ஏறி தப்பி விடுகிறது. சுப.முத்துக்குமார் வக்கீல் கூச்சலிடுகிறார். போலீஸ் வருகிறது. முத்துக்குமாரை வழியனுப்பிய நண்பர்கள் விரைகின்றனர். முத்துக்குமார் படுகொலை கிட்டத்தட்ட அன்று இரவு சுமார் ஒரு மணிக்குள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது அவரின் நண்பர் வக்கீல் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். தமிழகமெங்கும் இருக்கும் முத்துக்குமாரின் நண்பர்கள், அரசியல் தோழர்கள், மாற்று கட்சியினர் என்று அனைவரும் மீளாத்துயரில் ஆள்கொள்கின்றனர். அதிகாலையில் இருந்தே அரசு மருத்துவமனை சுற்றிலும் பெருந்திரளான மக்கள் கூட்டம். புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் விரைகிறார். நாம் தமிழர் மாவட்ட நிர்வாகிகள், செயலர்கள், அமைப்பாளர்கள் என்று அனைவரும் குவிந்து விட்டனர். அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு முத்துக்குமார் உடலை நாம் தமிழர் இயக்கத்தினர் பெறுகின்றனர். முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் மெல்ல ஊர்ந்து செல்ல பின்வரிசையாக சுமார் 100 -க்கும் மேற்பட்ட கார்கள் செல்ல, புதுக்கோட்டை - பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகாடு என்ற பெரும் கிராமத்தை நோக்கி கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரம் கார் ஊர்வலமாக செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் திணறியது.
புதன் கிழமை காலையில் செந்தமிழர் சீமான் விரைகிறார். வடகாடு நோக்கி நாம் தமிழர் நிகழ்சிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு நடத்தி வரும் நாம் தமிழர் இயக்கத்தினர், இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று திணறினர். வடகாடு கிராமம் மட்டும் அல்ல, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் செய்தவறியாது நின்றனர். பின்பு முத்துக்குமார் உடலை அவரின் வீட்டின் முன் அதாவது முத்துக்குமார் மாமனார் கரு.காளிமுத்து வீட்டின் முகப்பில் புதைக்கப்படுகிறார். சீமான் வீரவணக்கம் முழங்க இந்த துயர சம்பவம் கனத்த நெஞ்சுடன் முடிவடைகிறது. நாம் தமிழர் இயக்கத்தினர் அடையும் முக்கிய சோக, துயர நிகழ்ச்சி இது.
சில மாதங்களுக்கு முன் இதே வடகாடு கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெங்கடாசலம் என்பவர் கொலை செய்யப்படுகிறார் அவரது சொந்த வீட்டிலேயே. இவரின் நெருங்கிய உறவினர் தான் கரு.காளிமுத்து. இவரின் மகளை தான் முத்துக்குமார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் முடித்தார். முத்துக்குமார் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் " இவரைப் பற்றி தெரியுமா " என்று துண்டு பிரசுரங்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர் ஒரு சிறு கும்பல் இரவில். அந்த பிரசுரத்தின் துண்டு நோட்டீசில் முத்துக்குமார் மீது உள்ள வழக்குகள், வீரப்பனுடன் உள்ள தொடர்புகள், தடை செய்யப்பட்ட புலிகளுக்கு மருந்துகள் வாங்கிய விபரங்களை எல்லாம் தெரிவித்து இறுதியில், கொலையுண்ட வெங்கடாசலத்தை ஏன் இவர் கொலை செய்திருக்கக் கூடாது என்று அரசியல் வகுப்பைப் போல எழுதி இருந்தார்கள். இந்த சிறு பிரசுரத்தை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களை மிக கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.
இடையில், முத்துக்குமாரின் மாமனார் கரு,காளிமுத்து, இந்தப் பிரசுரம் குறித்து தான் சந்தேகம் அடையும் இருண்டு மூன்று நபர்களை அடையாளப் படுத்துகிறார் காவல் நிலையத்தில். சிறு பிரசுரம் வெளியிட்ட மூன்றாவது நாளில் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுகிறார். இந்த துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழுதும் நண்பர்களால் அலசி பார்க்க முடிந்தது. காரணங்கள் அரசியல் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்றே பலராலும் பேசிக் கொண்டிருந்ததை அறிய முடிந்தன.
முத்துக்குமார் 89 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார்.பின்பு தமிழகம் வந்து தமிழர் மீட்சிப் படை என்ற ஒரு அமைப்பை பலப்படுத்துகிறார். தமிழீழம் தமிழகம் என்று அரசியல் வேலைகளை செய்கிறார். பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். தடா சட்டத்தில் சிறைக்கு செல்கிறார். பின்பு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். 'மீசை' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு செல்கிறார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் சேர்க்கப்படுகிறார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றும்.
புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு பகுதியில் இருந்து, இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொது மக்கள் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை கைது செய்து இந்த தடவை பொடாவில் போட்டார்கள். பின்பு வெளியே வந்த முத்துக்குமார் இந்திய இலங்கை விடுதலைப் புலிகளின் இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்புவார் என்று அல்லது அனுப்பினார் என்று கைது செய்து வழமை போல சிறையில் தள்ளியது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். முந்தா நாள் வரைக்கும்.
முத்துக்குமாரின் செயற்பாடுகளை மட்டும் அல்ல. நாம் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். என்ன யோசித்தாலும் காவற் துறைக்கு இந்த பாழாய்ப்போன சட்டங்கள் இடையூறாக இதுகாறும் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் நாம் தமிழர் இயக்க பணிகளை நிறுத்துவதற்கு ரயிலில் கல்லுகளைப் போட்டும் இரும்புத் துண்டங்களைப் போட்டும் தமிழ் தீவிரவாதிகள் என்றார்கள். நாம் தமிழர் என்றார்கள். ஒரு பத்துப் பதினைந்து பேர்களை தூக்கிக் கொண்டு சென்றார்கள். படு ரகசியமாக. பின்பு வக்கீல் தோழர்கள் 'ஆட் கொனர்வு' மனுவைப் போட்டு இந்த பாழாய்ப் போன சட்ட இடையூறுகளை ஏற்படுத்தி ஜாபர் சேட்டுக்கும், தமிழக முதல்வருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். பிறகு ஏன் இது போன்று செய்கிறீர்கள் என்றதற்கு முதல்வர் அவர்களின் நெருங்கிய தமிழ் அறிஞர் ஒருவர் இப்படி சொன்னார். "எல்லாம் இந்த ஜாபர் சேட் அவர்களின் வேலை என்று " முதல்வருக்கு தெரியாமல் இந்த உளவுத் துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து விட்டார் என்று புதிய விளக்கத்தை கொடுத்தனர்.
பிறகு என்ன செய்வது..? எப்படி நாம் தமிழர் இயக்கத்தை முடக்குவது..? நன்கு யோசித்து ஒரு செய்தியை கசிய விட்டார்கள் சில வாரங்களுக்கு முன்..! சீமான் அவர்களை கொலை செய்வதற்கு ஒரு டீம் சிங்கள உளவு மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் ட்ரெயின் செய்து ஆட்களை தமிழகத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்று. எனவே சீமான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று சொன்னார்கள். சீமான் அவர்கள் சொன்னார்கள் 'எனது மண்ணில் இறப்பதை பெருமையாக கொள்வேன்' என்றார். போலி மோதலில் கொல்ல முடியாது. அங்கேயும் சட்ட சிக்கல் வந்து விடுகிறது. மேலும் இந்த போலி மோதலை சீமான் அவர்கள் அரசியலாக்கி விட்டால் மேலும் பெரும் சிக்கலாகி விடும். எனவே தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டு இருக்கிறது. என்ன செய்யலாம்..? ஏதாவது செய்தே ஆக வேண்டும்..? என்ற நிலைமை இந்திய தமிழக உளவு துறைக்கு, சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பெரும் முட்களாக உள்ளனர். எல்லாம் தேர்தல் வரைக்கும். பிறகு தான் இருக்கிறதே அடக்குமுறை.
எனவே சீமானை பயமுறுத்தி வைக்க வேண்டும். அரசியல் செயற்பாடுகளை தற்காலிகமாவது தடுத்து நிறுத்த வேண்டும். எனில், என்ன செய்யலாம் என்று கருதி.... நாம் தமிழர் இயக்கத்தின் முக்கியமானவராக இருக்கும் இந்த முத்துக்குமாரை பழைய பாணியில், அதாவது கருப்பு வெள்ளை கால சினிமா பாணியில், காவல் துறையே மாற்று வேஷங்களில் புகுந்து ரவுடி வேசங்கள் போட்டு 'போட்டுத் தள்ளி' விட்டால் என்ன என்று, யோசித்து செய்திருக்கலாம் என்று ஒரு தோழர் இறங்க கூட்டத்தில் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். இதன் மூலம் வருங்காலங்களில் ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து விடுவதை தடுத்து நிறுத்தலாம். சீமானை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தை தடுத்து நிறுத்தலாம்..! எனவே இந்த மாதிரி நடவடிக்கைகளை 'நவீன போலி மோதல்' என்று சொல்லலாமா..? என்று இறங்கக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.
இளம் வயதில் முத்துக்குமார் யார் இந்த சு.ப முத்துக்குமார் 👇
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை 15.02.2011 இரவு சுமார் 10.15 மணிக்கு புதுக்கோட்டை நகரின் மைய்யப் பகுதியான அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் என்ற பழங்கள் விற்கும் கடையில், பழங்கள் வாங்கிக் கொண்டு இருக்கையில் பின்புறமாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பலில் வயிற்றில் கத்தியை சொருகுகிறார் ஒருவர்.
நிலைமை என்னவென்று அறிவதற்குள் மற்றொருவர் பின்புற தலையை நோக்கி அரிவாளால் வெட்டுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவருடைய வக்கீல் தடுக்க முற்படும் போது அவரின் கையில் வெட்டு விழுகிறது. முகத்திலும் வெட்டு விழுகிறது. சுப.முத்துக்குமார் எந்த வித சுயநினைவும் இன்றி பழக்கடையின் மைய்யப் பகுதியில் குடல் சரிய விழுந்து உயிரை விடுகிறார். கடைக்காரர்கள் நிலை என்னவென்று அறிவதற்குள் இந்த கொலைகார கும்பல் காரில் ஏறி தப்பி விடுகிறது. சுப.முத்துக்குமார் வக்கீல் கூச்சலிடுகிறார். போலீஸ் வருகிறது. முத்துக்குமாரை வழியனுப்பிய நண்பர்கள் விரைகின்றனர். முத்துக்குமார் படுகொலை கிட்டத்தட்ட அன்று இரவு சுமார் ஒரு மணிக்குள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது அவரின் நண்பர் வக்கீல் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். தமிழகமெங்கும் இருக்கும் முத்துக்குமாரின் நண்பர்கள், அரசியல் தோழர்கள், மாற்று கட்சியினர் என்று அனைவரும் மீளாத்துயரில் ஆள்கொள்கின்றனர். அதிகாலையில் இருந்தே அரசு மருத்துவமனை சுற்றிலும் பெருந்திரளான மக்கள் கூட்டம். புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் விரைகிறார். நாம் தமிழர் மாவட்ட நிர்வாகிகள், செயலர்கள், அமைப்பாளர்கள் என்று அனைவரும் குவிந்து விட்டனர். அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு முத்துக்குமார் உடலை நாம் தமிழர் இயக்கத்தினர் பெறுகின்றனர். முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் மெல்ல ஊர்ந்து செல்ல பின்வரிசையாக சுமார் 100 -க்கும் மேற்பட்ட கார்கள் செல்ல, புதுக்கோட்டை - பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகாடு என்ற பெரும் கிராமத்தை நோக்கி கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரம் கார் ஊர்வலமாக செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் திணறியது.
புதன் கிழமை காலையில் செந்தமிழர் சீமான் விரைகிறார். வடகாடு நோக்கி நாம் தமிழர் நிகழ்சிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு நடத்தி வரும் நாம் தமிழர் இயக்கத்தினர், இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று திணறினர். வடகாடு கிராமம் மட்டும் அல்ல, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் செய்தவறியாது நின்றனர். பின்பு முத்துக்குமார் உடலை அவரின் வீட்டின் முன் அதாவது முத்துக்குமார் மாமனார் கரு.காளிமுத்து வீட்டின் முகப்பில் புதைக்கப்படுகிறார். சீமான் வீரவணக்கம் முழங்க இந்த துயர சம்பவம் கனத்த நெஞ்சுடன் முடிவடைகிறது. நாம் தமிழர் இயக்கத்தினர் அடையும் முக்கிய சோக, துயர நிகழ்ச்சி இது.
சில மாதங்களுக்கு முன் இதே வடகாடு கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெங்கடாசலம் என்பவர் கொலை செய்யப்படுகிறார் அவரது சொந்த வீட்டிலேயே. இவரின் நெருங்கிய உறவினர் தான் கரு.காளிமுத்து. இவரின் மகளை தான் முத்துக்குமார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் முடித்தார். முத்துக்குமார் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் " இவரைப் பற்றி தெரியுமா " என்று துண்டு பிரசுரங்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர் ஒரு சிறு கும்பல் இரவில். அந்த பிரசுரத்தின் துண்டு நோட்டீசில் முத்துக்குமார் மீது உள்ள வழக்குகள், வீரப்பனுடன் உள்ள தொடர்புகள், தடை செய்யப்பட்ட புலிகளுக்கு மருந்துகள் வாங்கிய விபரங்களை எல்லாம் தெரிவித்து இறுதியில், கொலையுண்ட வெங்கடாசலத்தை ஏன் இவர் கொலை செய்திருக்கக் கூடாது என்று அரசியல் வகுப்பைப் போல எழுதி இருந்தார்கள். இந்த சிறு பிரசுரத்தை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களை மிக கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.
இடையில், முத்துக்குமாரின் மாமனார் கரு,காளிமுத்து, இந்தப் பிரசுரம் குறித்து தான் சந்தேகம் அடையும் இருண்டு மூன்று நபர்களை அடையாளப் படுத்துகிறார் காவல் நிலையத்தில். சிறு பிரசுரம் வெளியிட்ட மூன்றாவது நாளில் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுகிறார். இந்த துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழுதும் நண்பர்களால் அலசி பார்க்க முடிந்தது. காரணங்கள் அரசியல் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்றே பலராலும் பேசிக் கொண்டிருந்ததை அறிய முடிந்தன.
முத்துக்குமார் 89 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார்.பின்பு தமிழகம் வந்து தமிழர் மீட்சிப் படை என்ற ஒரு அமைப்பை பலப்படுத்துகிறார். தமிழீழம் தமிழகம் என்று அரசியல் வேலைகளை செய்கிறார். பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். தடா சட்டத்தில் சிறைக்கு செல்கிறார். பின்பு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். 'மீசை' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு செல்கிறார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் சேர்க்கப்படுகிறார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றும்.
புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு பகுதியில் இருந்து, இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொது மக்கள் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை கைது செய்து இந்த தடவை பொடாவில் போட்டார்கள். பின்பு வெளியே வந்த முத்துக்குமார் இந்திய இலங்கை விடுதலைப் புலிகளின் இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்புவார் என்று அல்லது அனுப்பினார் என்று கைது செய்து வழமை போல சிறையில் தள்ளியது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். முந்தா நாள் வரைக்கும்.
முத்துக்குமாரின் செயற்பாடுகளை மட்டும் அல்ல. நாம் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். என்ன யோசித்தாலும் காவற் துறைக்கு இந்த பாழாய்ப்போன சட்டங்கள் இடையூறாக இதுகாறும் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் நாம் தமிழர் இயக்க பணிகளை நிறுத்துவதற்கு ரயிலில் கல்லுகளைப் போட்டும் இரும்புத் துண்டங்களைப் போட்டும் தமிழ் தீவிரவாதிகள் என்றார்கள். நாம் தமிழர் என்றார்கள். ஒரு பத்துப் பதினைந்து பேர்களை தூக்கிக் கொண்டு சென்றார்கள். படு ரகசியமாக. பின்பு வக்கீல் தோழர்கள் 'ஆட் கொனர்வு' மனுவைப் போட்டு இந்த பாழாய்ப் போன சட்ட இடையூறுகளை ஏற்படுத்தி ஜாபர் சேட்டுக்கும், தமிழக முதல்வருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். பிறகு ஏன் இது போன்று செய்கிறீர்கள் என்றதற்கு முதல்வர் அவர்களின் நெருங்கிய தமிழ் அறிஞர் ஒருவர் இப்படி சொன்னார். "எல்லாம் இந்த ஜாபர் சேட் அவர்களின் வேலை என்று " முதல்வருக்கு தெரியாமல் இந்த உளவுத் துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து விட்டார் என்று புதிய விளக்கத்தை கொடுத்தனர்.
பிறகு என்ன செய்வது..? எப்படி நாம் தமிழர் இயக்கத்தை முடக்குவது..? நன்கு யோசித்து ஒரு செய்தியை கசிய விட்டார்கள் சில வாரங்களுக்கு முன்..! சீமான் அவர்களை கொலை செய்வதற்கு ஒரு டீம் சிங்கள உளவு மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் ட்ரெயின் செய்து ஆட்களை தமிழகத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்று. எனவே சீமான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று சொன்னார்கள். சீமான் அவர்கள் சொன்னார்கள் 'எனது மண்ணில் இறப்பதை பெருமையாக கொள்வேன்' என்றார். போலி மோதலில் கொல்ல முடியாது. அங்கேயும் சட்ட சிக்கல் வந்து விடுகிறது. மேலும் இந்த போலி மோதலை சீமான் அவர்கள் அரசியலாக்கி விட்டால் மேலும் பெரும் சிக்கலாகி விடும். எனவே தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டு இருக்கிறது. என்ன செய்யலாம்..? ஏதாவது செய்தே ஆக வேண்டும்..? என்ற நிலைமை இந்திய தமிழக உளவு துறைக்கு, சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பெரும் முட்களாக உள்ளனர். எல்லாம் தேர்தல் வரைக்கும். பிறகு தான் இருக்கிறதே அடக்குமுறை.
எனவே சீமானை பயமுறுத்தி வைக்க வேண்டும். அரசியல் செயற்பாடுகளை தற்காலிகமாவது தடுத்து நிறுத்த வேண்டும். எனில், என்ன செய்யலாம் என்று கருதி.... நாம் தமிழர் இயக்கத்தின் முக்கியமானவராக இருக்கும் இந்த முத்துக்குமாரை பழைய பாணியில், அதாவது கருப்பு வெள்ளை கால சினிமா பாணியில், காவல் துறையே மாற்று வேஷங்களில் புகுந்து ரவுடி வேசங்கள் போட்டு 'போட்டுத் தள்ளி' விட்டால் என்ன என்று, யோசித்து செய்திருக்கலாம் என்று ஒரு தோழர் இறங்க கூட்டத்தில் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். இதன் மூலம் வருங்காலங்களில் ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து விடுவதை தடுத்து நிறுத்தலாம். சீமானை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தை தடுத்து நிறுத்தலாம்..! எனவே இந்த மாதிரி நடவடிக்கைகளை 'நவீன போலி மோதல்' என்று சொல்லலாமா..? என்று இறங்கக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.
2010தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் 'எனது மீனவனை அடித்தால்! நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன்' என பேசிய சீமானை 15.07.2010 அன்று தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட சீமான், ''வென்றது ஆரியம், துணை நின்றது திராவிடம்'' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார்.
சென்னையில் சீமான் வசிக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஈமக்கலயங்கள்(செம்புகள்) சில வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ளன. மொத்தமாக உள்ள மூன்று கலயங்களில், ஒன்றில் ஈழப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் உயர்நீத்த முத்துக்குமாரின் திருச்சாம்பல்,மற்றொன்டில் பிரபாகரனின் தாயார் ஈழத்தாய் பார்வதியம்மாளின் திருச்சாம்பல், கடைசி ஒன்றில் பிரபாகரன் வீட்டு மண் வைக்கப்பட்டுள்ளது.
சீமான் வீட்டிலுள்ள ஈமக்கலயங்கள்
2010 ஏப்ரல் 16ம் நாள் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (வயது 80) மலேசிய தலைநகர் கோலாலம்பூரலிரிந்து சென்னைக்கு பக்கவாத நோய் சிகிச்சைக்காக வந்தார். மிகுந்த உடல்நலக்குறைவோடு வந்த அவரை இந்திய அரசு மருத்துவசிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது.இதைபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ''பார்வதியம்மாள் வந்தது எனக்கு இரவு 12 மணிக்குதான் தெரியும், எனவேதான் இதனைச்சொல்லி வைகோவை விமானநிலையத்திற்கு அனுப்பிவைத்தேன்'' என்றார்.ஆனால் மலேசியாவிலிருந்து பார்வதியம்மாள் கிளம்பும்போதே அவரின் உதவியாளர் விஜயலட்சுமி கருணாநிதியிடம் தொலைபேசிவழியாக பேசிவிட்டுதான் வந்ததாக குறிப்பிட்டார்.மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிய அவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இலங்கை சென்று வல்வட்டிதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.2011 பிப்ரவரி 20ம் தேதி சிகிச்சைபலனின்றி பாரவதியம்மாள் மரணமடைந்தார். அவரின் ஈமச்சாம்பலை சீமான் பூசையரையில் வைத்துள்ளார்.
2010, மே 10-ம் நாள் 'நாம்தமிழர் இயக்கம்' 'நாம்தமிழர் கட்சியாக' உருவெடுத்தது.
தஞ்சையில் நாம்தமிழர் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
2010, டிசம்பர் 27-ம் நாள் 'உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி' மற்றும் 'நீங்கதான் சாவி' ஆகிய இரு நூல்களை வெளியிடும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் சீமான் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ என்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிட்டு எழுத்தாளர்கள் முன் உறையாற்றினார்.
பால் நியூமன் (Paul Newman) நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்
2011 ஆம் ஆண்டு மனிதவுரிமை செயல்பாட்டாளர் பால்நியூமன் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
28.9. 2010 ல் ''புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும்'' என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.அதில் ஐயா பழ.நெடுமாறனுடன் பால் நியூமன்
ஐயா பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றிவந்த பால் நியுமன் ஈழத்தமிழர் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார்.
மே17 இயக்கத்தின் இணைந்து செயல்பட்டார்.(மே17 இயக்கத்தின் 28.02.2010 கூட்டத்தில் பால் நியூமன் மே17 கூட்டம் 28.02.2010
இவர் Unfettered Genocide in Tamil Eelam என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.
பால் நியூமன் எழுதிய நூல்
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பால் நியூமன் அறிக்கையும் நாம் தமிழர் கட்சி மீதான குற்றச்சாட்டும்;
டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பின் அறிக்கை
இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) 2010 ஆம் ஆண்டு ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.
இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத் தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.இதில் மனித உரிமை செயல்பாட்டாளராக பால் நியூமன் கலந்து கொண்டார். இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (preliminary Findings) வெளியிட்டார்.
அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹூதா அறிவித்தார்:
1. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே.
2. சிறிலங்க அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.
3. சிறிலங்காவிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
4. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா,இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.
இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.
பிரான்சுவா ஹூதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:
1. இலங்கையில் நடைபெற்ற போரில் சிறிலங்க அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.
2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.
4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் சிறிலங்க அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கைக்கு எதிராக பால்நியூமன் அளித்த குற்றச்சாட்டு அறிக்கையில்
40-ம் பக்கத்தில் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினர் என்று பதிவு செய்திருந்தார்.
இதைக்குறித்து பால் நியூமனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ''சர்வதேச அரங்கத்தில், தான் ஒரு மக்கள் பிரதினிதியாக பொதுவாக பேசவேண்டிய நிலையில் இருதரப்பையும் பற்றி அறிவிக்கவேண்டியசூழலில் இதனை பதியும்படியான கட்டாயத்திற்குள்ளானேன். ஆனால் விடுதலைப்புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினர் என்பது தவறானதே, காரணம் மக்களிடத்திலிருந்துதான் புலிகள் உருவாயினர்'' என்றார் மேலும் ''மக்கள் பிரதிநிதியாக சென்றதால் நடுநிலையை உறுதிப்படுத்தி அதன்மூலம் இலங்கை அரசின்மீது நான் அளித்த முக்கிய குற்றச்சாட்டுக்கள் பெரும் பாதிப்பினை இலங்கை அரசிற்கு ஏற்படுத்தி இந்த தீர்பையும் தந்துள்ளது'' என்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பாகதான் டப்ளின் தீர்ப்பாயத்தில் பால்நியூமன் அறிக்கை தாக்கல்செய்ததாக சிலர் குற்றம்சாட்டினர்.
ஆனால் டப்ளின் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்; நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதோ அதற்கு 4 மாதங்களுக்கு பிறகு, மே 18, 2010 அன்று. நாம் தமிழர் கட்சி தொடங்கும் முன்னரே டப்ளினில் கட்சி சார்பாக இவ்வறிக்கை சமர்ப்பித்ததாக கூறமுடியாது. அங்கே அவர் அவ்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்றே தொடங்கப்படவில்லை அதற்குமுன் அமைப்பாக இருந்த நாம் தமிழர் இயக்கத்திலும் பால் நியூமேன் இல்லை .
2011 ஏப்ரல் 13 ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது, தேர்தலுக்கு குறுகியகாலமே இருந்தது.காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளில் நிற்பதாகவும் அத்தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டது.
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் 59 தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து அதிமுக ஆதரவு பரப்புரையை மேற்கொள்ள குழுவில் முடிவு செய்யப்பட்டது.திட்டமிட்டபடி பரப்புரையும் செய்தார் சீமான், விளைவு பரப்புரைசெய்த 58 தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வியுற்றது,குருகிய காலம் மட்டுமே இருந்ததால் சீமானால் செல்ல முடியாத 4 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் விஜயலட்சுமி புகாரின்மூலம் மருபடியும் சீமானை அச்சுருத்த எண்ணினர். விஜயலட்சுமியால் ஆதாரமாக கொடுக்கப்பட்ட புகைப்படத்தினை காவல்துறை ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சீமானை பற்றிய தவறான கருத்துக்களையும் பரப்பின
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரால் ஒட்டப்பட்ட நோட்டிஸ்
2011 ஆம் ஆண்டு வெளிவந்த உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் சார்லஸ் ஆண்டனி வேடத்தில் நடித்துள்ளார்
2011 ஆம் ஆண்டு பெரியாரிய மேடையில் பேசிய நாத்தீக பேச்சுக்கள் துண்டுதுண்டாக வெட்டி கடவுள் மறுப்பு பிரசாரத்தை மட்டும் இணையத்தில் பரப்பினர். சீமான் பேசிய காணொளிகள் கோவை பெரியார் திராவிடர் கழகத்தில் சேமித்துவைக்கப்பட்டிருந்தது. சீமான் காங்கிரஸ்- திமுக எதிர்ப்பு பரப்புரை செய்ததால் இங்கிருந்து சிலரால் இக்காணொளிகள் யூ-டியூப் இணையத்தில் பரப்பப்பட்டன
2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்றுமாதங்களுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்ட்டரில்
சீமான் 2008ம் ஆண்டு பெரியாரிய மேடையில் பேசிய பேச்சுக்களை வைத்து போஸ்ட்டர் ஒட்டப்பட்டன. சீமான் 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றார்.
மேலும் இதைதொடர்ந்தும் 2013 செப்டம்பர் 17ம் தேதி இணையத்தில் சீமான் பெரியாரிய மேடையில் பேசிய நாத்தீக காணொளிகள் காணொளிதுண்டுகளாக 'நவீன் பில்'(Naveen Phil ) என்ற திராவிட இயக்க இணையதள பதிவரால் பதிவேற்றப்பட்டது.இராமர், கிருஷ்ணர், இயேசு போன்ற தெய்வங்களை பற்றி பேச்சுக்கள் கத்தரித்து அந்தபகுதிகள் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த முதல்
கலந்தாய்வுக் கூட்டம்.. சீமான் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த வாரம் நடந்த கலந்தாய் கூட்டம்.
இயற்கைபேரறிஞர் நம்மாழ்வாருடன் நாம் தமிழர் கட்சியின் போராட்டம்
2011 ஆம் ஆண்டு இயற்கைபேரறிஞர் நம்மாழ்வார் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார்.
2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்நாளில் தமிழ்நாட்டின் இடிந்தகரையில் இந்திய காங்கிரஸ் + தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அணுவுலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு முதலில் ஆதரவுதெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல்வாதி சீமான் மட்டுமே.
2011 ஆம் ஆண்டுகளில் திராவிட கொள்கையால் தமிழர்கள் இனப்பற்றை இழந்து தங்கள் உரிமைகள் பலவற்றை இழந்து காணப்படுவதாக கூறி, கடுமையாக திராவிட எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். ''தமிழுணர்வை திராவிடவுணர்வு நீர்த்துபோக செய்தது'' ,திராவிட கொள்கைகளுக்கு மாற்று தமிழ்தேசியக் கொள்கையே,என பரப்புரை செய்தார்.
முல்லைபெரியாரு நீர் உரிமை பிரச்சணையில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி கைதான சீமான்.
இராஜபக்சே வருகையை தொடர்ந்து இரண்டே மாதத்தில் மே 18ம் நாள்(18.05.2013) கூடலூரில் நடைபெற்ற இன எழுச்சிநாள் பொதுக்கூட்டத்திற்கு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து இந்திய அரசிற்கு தனது எதிர்ப்பினை பதிவுசெய்தார் சீமான்.
மே 18 நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சிமாநாட்டில் பேசிய காஷுமீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்.
2013 செப்டம்பர் மாதம் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். பழ.நெடுமாறன் தலைமையில் தமிழ்முறைப்படியாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெற்ற மறுநாளே சீமான் - கயல்விழி இணையர், கூடங்குளம் அணுவுலை போராட்டல் மக்கள்முன் தோன்றினர்.
2014நவம்பர் மூன்றாம்நாள் டெல்லியிலுள்ள ஜந்தர்மந்தரில் சீக்கியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சீமான் பங்கேற்று சீக்கியர்கள் நடுவே ஒரு சிறப்புரை ஆற்றினார்.
சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி
சீமான் ஈழப்படுகொலையும் தேசிய இனங்களின் அரசியலையும், பிரபாகரனின் போராட்டம் குறித்தும் பேசியபேச்சு பஞ்சாபிமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. சீமானின் பேச்சு ஜக்மோகன்சிங் என்ற சீக்கிய இனப்போராளியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சி போட்டியிடும் அணைத்து தேர்தல்களிலும் சீமானுக்கு ஆதரவாக தமிழகத்திற்கு வந்து பரப்புரை செய்யுமளவு ஒரு சீக்கியரின் நட்பு சீமானுக்கு கிடைத்தது.
சீமானின் டெல்லி உரை பல தேசிய இனங்களின் அடக்குமுறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என போராட்டத்தில் பங்கேற்ற மலையாளிகளின் பிரதிநிதி ரமேஸ் குறிப்பிட்டார்.
2015 பிப்ரவரி ஏழாம் நாளில் வீரத்தமிழர் முன்னணி என்ற கிளை அமைப்பினை சீமான் உருவாக்கினார். பண்பாட்டு மீட்சிக்காக இவ்வமைப்பு துவக்கப்பட்டதாக சீமான் அறிவித்தார்.பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்ற தத்துவத்தை முன்வைத்து இவ்வமைப்பு இயங்கியது.
இவ்வமைப்பின் சார்பாக
திருமுருகப் பெருவிழா,
மாயோன் பெருவிழா,
கண்ணகிப் பெருவிழா போன்ற தமிழர் மெய்யியல் விழாக்களும்,
கிராம பூசாரிகள் மாநாடு என்ற தமிழர் வழிபாடு குறித்த மாநாடும்,
மரபுவழி உழவு, உணவுத்திருவிழா,
இளநீர் குடிக்கும் திருவிழா
வேல்பேரணி, காவடிபேரணி.என பல விழாக்களும் நடத்தப்பட்டன.
வீரத்தமிழர் முன்னணி என்பது தமிழர்களின் மெய்யியல் சார்ந்த பண்பாடு மற்றும் வழிபாட்டுக்கூறுகளை மீட்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இவ்வமைப்பின் சார்பாக வேல்வீச்சு என்ற இதழும், தமிழம் என்ற நூல் வெளியீட்டு பதிப்பகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
திராவிடம் என்ற பெயரால் எப்படி வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் கோலோச்ச முடியுமோ, அதுபோலவே இந்து என்ற பெயரால் தமிழகத்தின் வணிகங்களிலும் அதிகார நிலைகளிலும் தமிழர் அல்லாத வேற்றினத்தவர்கள் கோலோச்சிடமுடியும். தேசிய கட்சிகளான காங்கிறசும், பாரதிய ஜனதா கட்சியும் இதர தேசிய அமைப்புக்களும் வேற்றுமாநிலத்தவர்களின் தமிழகத்தின் மீதான் ஆளுமையை ஒருபோதும் பேசிவிட முடியாது, அதுபோலவே திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும் தமிழர் அல்லாதோரை தலைமை கொண்டுள்ளதால் அவற்றாலும் வேற்றுமாநிலத்தவர்களின் நுழைவினையோ, அவர்களின் அதிகாரபோக்கினையும் பேசவிட முடியாது.
சீக்கியர்கள் தங்கள் இனத்தின் பண்பாட்டினை காத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் தாங்கள் சீக்கிய இனத்தவராகவும், தங்களின் தனித்த வழிபாட்டுக்கூறுகளை சீக்கியம் என்ற மதமாகவும் வகுத்துக்கொண்டதாலேயே அவர்கள் தங்களின் இனத்தை காத்துக்கொண்டனர். சீக்கியர்களின் மதமும் இனமும் சீக்கியம் என்ற ஒரே சொல்லால் குறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது போல, தமிழர்களின் பண்பாடு வழிபாட்டுமுறையும் தமிழம் என்ற ஒரு குடையின்கீழ் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பு ஆகும்.
தமிழகத்தில் சிவநெறி என்பது தமிழர்களின் சொந்த மதமாகும். இந்தியா முழுவதும் சிவனிய நெறிகள் காணப்பட்டாலும், தென்னாடுடைய சிவன் ஒரு தமிழ் கடவுளாகவும் முதல் தமிழ்சங்கத்தின் தலைவனாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த பெருமை இந்தியாவில் எந்த இனத்திற்கும் கிடையாது. இந்து என்ற பெயரால் தமிழகத்திலுள்ள சைவ ஆதீனங்களில் வேற்றினத்தாரும், வேற்றுமொழியான சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளின் ஆதிக்கமும் செலுத்தவிடாமல் தமிழர்களையும், தமிழையும் தொடர்ந்து முந்நிலைப்படுத்துவது மிகவும் அவசியப்படுகிறது. இதற்கான ஒரு அமைப்பு இங்கே தேவைப்படுகிறது.
"தமிழர் வழிபாட்டில் உள்ள ஆரிய கூறுகளை நீக்கினால் தமிழரின் வழிபாட்டை மீட்டுவிடலாமேவொலிய திராவிடம்போல கடவுள் இல்லை என்று இன்னும் கூறிக்கொண்டிருந்தால் ஆரியத்துவா அரசியல் அதிகமாகத்தான் தமிழகத்தில் நிலைப்பெரும். அதனை வீழ்த்த தமிழம் என்ற தமிழர் வழிபாட்டு ஒருங்கிணைப்பே உதவும்"
- செந்தில்நாதன்
செந்தில்நாதன் துறைராசன் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழர் முன்னணி
திருமுருகப் பெருவிழா
வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆண்டுதோரும் தமிழ்கடவுள் முருகனுக்கு விழா நடத்தவேண்டும் என முடிவு செய்யப்பட்டு முதன்முதலாக தமிழ்கடவுள் முருகன் என்ற பதம் வீரத்தமிழர் முன்னணியால் அரசியல் படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் முதல் தமிழர் மெய்யியல் கருத்தியல் சார்ந்த வேல்பேரணி நடத்திய வரலாற்று பெருமையும் வீரத்தமிழர் முன்னணியை சேரும்
திருமுருகப் பெருவிழா 2016 திருப்பரங்குன்றம்;
2016ம் ஆண்டு இதுவரை தமிழ் மண்ணில் பல ஆண்டுகளாக மத அரசியல் செய்யும் கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்காத முக்கிய நிகழ்வினை மீட்டெடுத்தது வீரத்தமிழர் முன்னணி. சங்க காலத்தில் தமிழர்களின் வழிபாட்டு முறையிலான திருமுருகப்பெருவிழாவினை ஆச்டுதோரும் நடத்தவேண்டும் என்ற அந்த நிகழ்வு வரலாற்றுச்சிறப்பு மிக்கது.27.01.2016 ஆம் ந
வீரத்தமிழர் முன்னணியால் தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கம்
முருகனுக்கு முதன்மை இடம்; வீரத்தமிழர் முன்னணி அமைப்பு உருவாகின சிலகாலங்களிலேயே தமிழர்களின் தனித்த வழிபாட்டுக்கூறான முருகவழியை முதன்மைப்படுத்தி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. மலையாள மக்கள் சுவாமி ஐயப்பனுக்கு கொடுக்கும் முன்னுரிமைபோல, தெலுங்குமக்கள் வெங்கடாசலபதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம்போல அதனினும் பழமைவாய்ந்த முருகவழிபாட்டிற்கு தமிழர்கள் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தருதல் அவசியமாக கற்பிக்கப்பட்டது. முருகன் தமிழர்களின் தெய்வம் என்பதை உறுதிபடுத்தவும் ஆவனமாக்கவும் முப்பாட்டன் முருகன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
வீரத்தமிழர் முன்னணியின் தொடர் பரப்புரையால் அண்டை மாநிலங்களுக்கு வழிபாட்டிற்காக செல்லும் தமிழர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துபோனது.ஆறுபடைவீடுகளில் கூட்டம் அதிகரிக்கத்துவங்கியதை பெரும்மாற்றமாகவே பத்தரிக்கைகள் பேசிக்கொண்டன.
தமிழ் வழிபாட்டிற்கான போராட்டம்;
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும்படி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வழக்குதொடரப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் குடமுழுக்கு நடத்தி வெற்றி கண்டனர்.
இலங்கையில் உதவிக்கரம்;
30.06.2018 அன்று இலங்கை முதலைகுடா பகுதியில் ஈழமண்டல வீரத்தமிழர் முன்னணி ஏழை மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி உதவியது.
மேலும் தகவலுக்கு; http://www.battinews.com/2018/06/blog-post_290.html
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
மாயோன் பெருவிழா
2015 செப்டம்பர் 14 ஆம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்ற மாயோன் பெருவிழா கூட்டத்தில் செஞ்சிக்கோட்டை மீட்புபோராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. செஞ்சிக்கோட்டை கோனேறிக்கோன் என்ற தமிழ்மன்னனால் கட்டப்பட்டதால் ''கோனேறிக்கோன் கோட்டை'' என அழைக்க உறுதியேற்றனர். இவ்விழாவில் பேசிய சீமான் ;
'' முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார்.' மாயோன் மேய காடுறை உலகு'என்று தொல்காப்பியம் போற்றுகிறது எனவே நமது மாயோன்தான் கிருஷ்ணராக வழிபடப்படுகிறது '' -என்றார்.
மாயோன் பெருவிழா போஸ்ட்டர்கள்
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
கிராம்பூசாரிகள் மாநாடு
2015ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கிராம பூசாரிகள் மாநாடு நடத்தப்பட்டது.300 க்கும் மேற்பட்ட ஊர்பூசாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
திருமுருகப் பெருவிழா
2016ஜனவரி 27 ம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மதுரையில் அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பறங்குன்றத்தின் திருமுருகப்பெருவிழா நடத்தப்பட்டது.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
மரபுவழி உழவு மற்றும் உணவுத் திருவிழா
2016 செப்டம்பர் 18 ம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மரபுவழி உழவு மற்றும் உணவித்திருவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு ஜாதவ் மோலை பெயிங் என்ற மரபுவழி வேளாண் அறிஞரும், ஹிப் ஹாப் ஆதியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
இளநீர் குடிக்கும் திருவிழா
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
வேல் பேரணி,காவடி பேரணி
தமிழகத்தில் முதன்முதலாக வேல்பயணம் நடத்தி முருகவழிபாட்டை முன்னிருத்திய பெருமை வீரத்தமிழர் முன்னணியையே சேரும்.இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வு
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ம் நாளில் நடைபெற்ற திருமுருகப்பெருவிழாவில் நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர்வரையில் வேல் பயணம் என்ற தமிழர்களின் பழங்கால வேல்வழிபாட்டை மீட்டெடுக்கும்படியாக ஒரு பேரணியை வீரத்தமிழர் முன்னணி ஏற்பாடு செய்தது. காவல்துரையினர் அதற்கான அனுமதியை மறுத்ததால் எளிமையான முறையில் வேல்பேரணி நடைபெற்று இருதியாக திருச்செந்தூர் கடலில் வேல் வழிபாடு விடுதலைப்பாவலர் அறிவுமதியால் நடத்தி பேரணி முடிக்கப்பட்டது .
வேல் பேரணியில் விடுதலைப்பாவலர் அறிவுமதி
இதைதொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவாளருமான எச்.ராஜா அவர்கள் மார்ச் 24ம் தேதி இந்து ஆலயமீட்பு இயக்கம் மூலமாக வேல் சங்கம யாத்திரை என்ற ஒன்றை ஆரம்பித்தார். ''வீரத்தமிழர் முன்னணியின் வேல்பேரணிக்கு போட்டியாக இதனை செய்தாலும், எச்.ராஜா தமிழர் வழிபாட்டிற்கு திரும்பிவருகிறார்'' என்று அறிவுமதி குறிப்பிட்டார்.
2016 சனவரி 19 இல் மதுரைமாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி சல்லிக்கட்டு நடத்தவிருந்த சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆதாரம்; தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்தமுயன்ற சீமான் கைது!
மார்ச் 23 ஆம் தேதி சீமானால் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவில் சல்லிக்கட்டின் அவசியமும் நாட்டுமாட்டின் பாதுகாப்பும் பற்றி விரிவாக விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆதாரம்; செயல்பாட்டு வரைவு
17.01.2017 அன்று காலை அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டத்தின் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இதனைத்தொடர்ந்து இச்செய்தி மலமலவென அண்டை ஊர்களில் பரவ மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இளைஞர்கள் மெரினா கடற்கறையில் குவியத்துவங்கினர். அதுதான் தைபுரட்சியின் முதல்நாள். ஆதாரம்; ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல்நாள்
2017 சனவரி 21 இல் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியால் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சீமானின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சீமான் பரிசுகளும் வழங்கினார் ஆதாரம்; சீமான் தலைமையில் ஜல்லிக்கட்டு
23.1.2017ஜல்லிக்கட்டு போராட்ட இறுதிநாளில் போலிசாரின் அடக்குமுறைமீரி மெரினா கடற்கரையில் பட்டினியாய் போராடிய மாணவர்களுக்கு, போலீசாருக்கே தெரியாமல் மாற்றுவழியில் சென்று உணவுவழங்கிய சீமான். ஆதாரம்; https://www.youtube.com/watch?v=KYptbHbT00g
காவிரி உரிமைப்போராட்டத்தின்போது அதனை மழுங்கடிக்க ஐபிஎல் கிரிக்கெட்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்படுவதாக கூறி ஒரு வீரியமான போராட்டத்தை சீமான் முன்னெடுத்தார்.இப்போராட்டம் முகியத்துவம் பெற காரணம் இப்போராட்டம்தான் தமிழ்நாட்டுக். கொடிஏந்தி தமிழகத்தில் நடைபெற்ற முதல் போராட்டம். இது சேப்பாக்க புரட்சி என அழைக்கப்பட்டது
சீமானும் இளைஞர்களும்
சீமானின் பேச்சுக்கள் வெகுவான இளைஞர்கள் நடுவே ஒரு விளிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. சீமானை ஏற்பவர்களும் அல்லது அவரை விமர்சிப்பவர்களும் பெரும்பாலும் இளைஞர்களே.
காவிரிச்செல்வன் விக்னேஷ் தீக்குளிப்பு
காவிரிச்செல்வன் விக்னேஷுடன் சீமான்
2016 ஆம் ஆண்டு காவிரி பிரச்சனை உச்சத்தில் சென்றது, குறுவை சாகுபடியே பொய்த்துப்போன நிலையில் உழவர்கள் மட்டுமில்லாது தமிழ்நாடே போராட்டபூமியானது. இந்நிலையில் சீமானின் தம்பி விக்னேஷ் பாண்டியன் என்ற இளைஞர் செப்டம்பர் 16ம் நாள் சீமான் அறிவித்திருந்த காவிரி உரிமைமீட்பு பேரணியில், காவிரி பிரச்சனை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தீக்குளித்தார்.இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான சீமான், இதைபோன்ற செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் என்று அறிவுறித்தினார்.
காவிரிச் செல்வன் விக்னேஷ் எழுதியுள்ள கடிதம்
2017 ஆம் ஆண்டைய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அட்டை வினியோகம் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேலாக இருந்தது. அதில் 25 வயதிற்கு உற்பட்ட இளைஞர்களே மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் ஆவர்.
தமிழ்நாட்டில் கனிசமான அளவிலான இளைஞர்களை தன்னகத்தே கொண்டது நாம் தமிழர் கட்சி. அதற்கு சீமானின் பேச்சு மிகமுக்கிய காரணியாக அமைந்துள்ளது
சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம்
- மணிசெந்தில்
சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் - நூல் எழுதிய மணிசெந்தில்
"சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம்" - என்ற சீமான் வாழ்க்கைவரலாற்றையும் அவர் முன்னெடுத்த போராட்டங்களையும் மணிசெந்தில் என்ற இளைஞர் தொகுத்து எழுதி புத்தகமாக வெளியிட்டார் என்பது சீமானின் மீதான இளைஞர்களின் ஈர்ப்பை அனைவரும் உணர்ந்துகொள்ள இயலும்.
சீமானின் சில முக்கிய தமிழர் இறையாண்மை சார்ந்த மேடைப்பேச்சுக்களின் தொகுப்பாக "தமிழர் இறையாண்மை அரசியல்"! என்னும் நூல் பாக்கியராசன் என்ற இளைஞரால் தொகுத்து வெளியிடப்பட்டது.
இந்த நூலை இயற்றியவர் ஆ.மதுசூதனன் இவர் ஒரு இளம் எழுத்தாளர்.இவரது முதல் நூல் தூய தமிழ் சொற்கள் ஆகும்.இது ஒரு கல்வி சார்ந்த அனைவரும் கற்க வேண்டிய நூலாகும்.இவரது இரண்டாம் நூல் இவரது கற்பனையில் வெளிவந்த மற்றும் சில உண்மைகள் நிறைந்த "தி வில்லேஜ் சுல்தான்" எனும் நூலாகும்.இவர் இளங்கலை கணினி பயன்பாட்டியல் பயின்றவர்.மற்றும் சமூக ஆர்வலர்.
கல்லூரிகளில் அரசியல்பேச தடையும் - அதன் பின்னணியும்
2018 ஏப்ரல் 25ஆம் நாள் தமிழக அரசால் கல்லூரிகளில் அரசியல் பேசுவதை தடைசெய்வித்து ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அரசியல் கட்சி தலைவர்கள் கல்லூரிவிழாக்களில் பங்கேற்று அரசியல்தொடர்பான கருத்துக்களை பேசுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.சீமான் தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் தமிழ்தேசியம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பியதும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
சீமானின் இந்திய ஒன்றியம்
2021 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பு கொண்ட நாடு. இதனை "ஒன்றிய அரசு" என்றே சீமான் பல ஆண்டுகளாக பேசி வந்தார்.இதுவரை மத்திய அரசு என்றே அழைத்து வந்த தமிழக திமுக தலைமையிலான தமிழக அரசு 2021-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு என்ற சீமானின் பதத்தையே பயன்படுத்தி மத்திய அரசுடன் விவாதத்தில் ஈடுபட்டது.
தடைகளை உடைத்தல் - நாம் தமிழர் கட்சியின் தனித்துவம்
அரசின் அடக்குமுறை தளர்க்க, மக்களுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில் தடையை மீறுவது என்பது மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதே.
மக்களுக்கு எதிராக உள்ள சில, அரசின் சட்ட விதிமுறை தொடர்பான தடைகளை உடைப்பதில் நாம் தமிழர் கட்சி பெரும்பங்கு ஆற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக நாம் தமிழர் கட்சி தொண்டர்களால் திருச்சியில் உடைக்கப்பட்ட முதல் மதுக்கடை, மற்றும் தடையை மீறி நடத்தப்பட்ட முதல் ஜல்லிக்கட்டு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.இது அந்த போராட்டங்களுக்கு வெற்றிகளையும் சில நேரங்களில் பெற்று தந்துவிடுகிறது.
தடையை மீறி டாஸ்மாக் கடை உடைப்பு:
திருச்சியில் முதல் முதலாக நாம் தமிழர் கட்சி தொண்டர்களால் மதுபான கடை அடித்து நொறுக்கப்பட்டது.
12.01.2017 ல் முதன்முதலாக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய பெருமை நாம் தமிழர் கட்சியை சாரும். 27.12.2016 ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுச்சி மிகுந்த உரையாற்றிய சீமான் இதனை தொடர்ந்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார்.
தடையை மீறி கல் இறக்கும் போராட்டம்:
தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கல் விடுதலையே பிரதான தீர்வாகும் என்ற நிலைப்பாட்டில் தடையை மீறி நாம் தமிழர் கட்சி கல் இறக்கும் போராட்டம் நடத்தி சீமானே முன்னின்று பனை ஏறி கல் இறக்கினார்.
தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்:
மேய்ச்சல் நில உரிமைக்காக தடையை மீறி மலை மாடுகளை அதன் பூர்வீக மலைகளில் மேய்த்து முதல் முறையாக மேய்ப்பர்கள் உரிமைகளுக்காக தடையை மீறியது நாம் தமிழர் கட்சி.
In 20 years Mr SEEMAN has created a history of 100 years. The speciality and the investment are his, "THOUGHTS AND TAMIZ PATRU" As he use to say he may be vanished BUT HIS PRINCIPLES WILL NEVER - DIE.
வீரத்தமிழர் முன்னணி வரலாறு `````````````````````````````````````````````````````````````````````````` வீரத்தமிழர் முன்னணி என்பது தமிழர்களின் மெய்யியல் சார்ந்த பண்பாடு மற்றும் வழிபாட்டுக்கூறுகளை மீட்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இவ்வமைப்பின் சார்பாக வேல்வீச்சு என்ற இதழும், தமிழம் என்ற நூல் வெளியீட்டு பதிப்பகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. திராவிடம் என்ற பெயரால் எப்படி வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் கோலோச்ச முடியுமோ, அதுபோலவே இந்து என்ற பெயரால் தமிழகத்தின் வணிகங்களிலும் அதிகார நிலைகளிலும் தமிழர் அல்லாத வேற்றினத்தவர்கள் கோலோச்சிடமுடியும். தேசிய கட்சிகளான காங்கிறசும், பாரதிய ஜனதா கட்சியும் இதர தேசிய அமைப்புக்களும் வேற்றுமாநிலத்தவர்களின் தமிழகத்தின் மீதான் ஆளுமையை ஒருபோதும் பேசிவிட முடியாது, அதுபோலவே திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும் தமிழர் அல்லாதோரை தலைமை கொண்டுள்ளதால் அவற்றாலும் வேற்றுமாநிலத்தவர்களின் நுழைவினையோ, அவர்களின் அதிகாரபோக்கினையும் பேசவிட முடியாது. சீக்கியர்கள் தங்கள் இனத்தின் பண்பாட்டினை காத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் தாங்க...
அருமையான பதிவு நன்றி
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஇலக்கு ஒன்று தான் என் இனத்திற்கு விடுதலை
ReplyDeleteநாம் தமிழர்
அருமை
ReplyDeleteநன்றி
வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்
ReplyDeleteவெற்றி வெகு விரைவில்
ReplyDeletewow! Seeman is a great leader for history and for tamil nafu future. Blogger is very fentastic nice page.
ReplyDeleteஉத🤔ரு தாமதம் உடனே விழி தமிழா!!🤔
ReplyDeleteதமிழினத்தை தலைநிமிர்த்தும் பயணம்
ReplyDeleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள் தொகுப்பாளருக்கு
அருமை நண்பா
ReplyDeleteIn 20 years Mr SEEMAN has created a history of 100 years. The speciality and the investment are his, "THOUGHTS AND TAMIZ PATRU"
ReplyDeleteAs he use to say he may be vanished BUT HIS PRINCIPLES WILL NEVER - DIE.
மிக அருமை 👌
ReplyDelete