Posts

Showing posts from November, 2023

வீரத்தமிழர் முன்னணி அமைப்பு

Image
வீரத்தமிழர் முன்னணி வரலாறு `````````````````````````````````````````````````````````````````````````` வீரத்தமிழர் முன்னணி என்பது தமிழர்களின் மெய்யியல் சார்ந்த பண்பாடு மற்றும் வழிபாட்டுக்கூறுகளை  மீட்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இவ்வமைப்பின் சார்பாக வேல்வீச்சு என்ற இதழும், தமிழம் என்ற நூல் வெளியீட்டு பதிப்பகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. திராவிடம் என்ற பெயரால் எப்படி வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் கோலோச்ச முடியுமோ, அதுபோலவே இந்து என்ற பெயரால் தமிழகத்தின் வணிகங்களிலும் அதிகார நிலைகளிலும் தமிழர் அல்லாத வேற்றினத்தவர்கள் கோலோச்சிடமுடியும். தேசிய கட்சிகளான காங்கிறசும், பாரதிய ஜனதா கட்சியும் இதர தேசிய அமைப்புக்களும் வேற்றுமாநிலத்தவர்களின் தமிழகத்தின் மீதான் ஆளுமையை ஒருபோதும் பேசிவிட முடியாது, அதுபோலவே திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும் தமிழர் அல்லாதோரை தலைமை கொண்டுள்ளதால் அவற்றாலும் வேற்றுமாநிலத்தவர்களின் நுழைவினையோ, அவர்களின் அதிகாரபோக்கினையும் பேசவிட முடியாது.  சீக்கியர்கள் தங்கள் இனத்தின்  பண்பாட்டினை காத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் தாங்கள் சீக்கிய இனத
Image
  பொங்கல்  பண்டிகை வரலாறு பொங்கல் காலத்தில் வீட்டில் வெள்ளை அடிப்பதும், பொங்கபடி என்ற பழங்கால போனஸ் முறையும், மருமகனுக்கு பொங்கசீர் என்ற சீர்வரிசையும்...  ஆகிய முறைகள் நம் கண்முன்னே அழிந்து வரும் இக்காலத்தில், இத்தனை பண்பாட்டு கூறுகளையும் 20ம் நூற்றாண்டு வரை கொண்டு வந்து கொடுத்த பொங்கல் பண்டிகையின் சில மிச்ச வரலாற்று அசைவுகளை ஆவனப்படுத்தப்பட வேண்டியது நம் கடமை. 2000 ஆண்டுகள் பழமையான பொங்கல் பண்டிகை பற்றி சங்க காலப் பாடல்களில் உள்ள தகவல்கள் ; வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய் கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம் போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்(புறம்:22) என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில்  நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,  கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் குறுங்கோழியூர் கிழார்.   பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்