யவனர் வரலாறு கல்வெட்டில் யவனர்கள் -------------------------- யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார். யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர். யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில...
Posts
வீரத்தமிழர் முன்னணி அமைப்பு
- Get link
- X
- Other Apps

வீரத்தமிழர் முன்னணி வரலாறு `````````````````````````````````````````````````````````````````````````` வீரத்தமிழர் முன்னணி என்பது தமிழர்களின் மெய்யியல் சார்ந்த பண்பாடு மற்றும் வழிபாட்டுக்கூறுகளை மீட்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இவ்வமைப்பின் சார்பாக வேல்வீச்சு என்ற இதழும், தமிழம் என்ற நூல் வெளியீட்டு பதிப்பகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. திராவிடம் என்ற பெயரால் எப்படி வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் கோலோச்ச முடியுமோ, அதுபோலவே இந்து என்ற பெயரால் தமிழகத்தின் வணிகங்களிலும் அதிகார நிலைகளிலும் தமிழர் அல்லாத வேற்றினத்தவர்கள் கோலோச்சிடமுடியும். தேசிய கட்சிகளான காங்கிறசும், பாரதிய ஜனதா கட்சியும் இதர தேசிய அமைப்புக்களும் வேற்றுமாநிலத்தவர்களின் தமிழகத்தின் மீதான் ஆளுமையை ஒருபோதும் பேசிவிட முடியாது, அதுபோலவே திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும் தமிழர் அல்லாதோரை தலைமை கொண்டுள்ளதால் அவற்றாலும் வேற்றுமாநிலத்தவர்களின் நுழைவினையோ, அவர்களின் அதிகாரபோக்கினையும் பேசவிட முடியாது. சீக்கியர்கள் தங்கள் இனத்தின் பண்பாட்டினை காத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் தாங்க...
- Get link
- X
- Other Apps

பொங்கல் பண்டிகை வரலாறு பொங்கல் காலத்தில் வீட்டில் வெள்ளை அடிப்பதும், பொங்கபடி என்ற பழங்கால போனஸ் முறையும், மருமகனுக்கு பொங்கசீர் என்ற சீர்வரிசையும்... ஆகிய முறைகள் நம் கண்முன்னே அழிந்து வரும் இக்காலத்தில், இத்தனை பண்பாட்டு கூறுகளையும் 20ம் நூற்றாண்டு வரை கொண்டு வந்து கொடுத்த பொங்கல் பண்டிகையின் சில மிச்ச வரலாற்று அசைவுகளை ஆவனப்படுத்தப்பட வேண்டியது நம் கடமை. 2000 ஆண்டுகள் பழமையான பொங்கல் பண்டிகை பற்றி சங்க காலப் பாடல்களில் உள்ள தகவல்கள் ; வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய் கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம் போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்(புறம்:22) என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் குறுங்கோழியூர் கிழார். பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டிர...
2000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டு முத்திரையும் மூவேந்தர்கள் உருவாக்கிய தமிழ்நாடும்
- Get link
- X
- Other Apps

தமிழ்நாடு எப்போது வந்தது? தமிழகம் என்பதே சரி....? பாரதி பாடிய பெயர் சங்க இலக்கியங்களில் உள்ள பெயர்... செல்லாது... செல்லாது அண்ணா முன்மொழிந்த பெயர்... செல்லாது செல்லாது... உங்களுக்கு ஒரு சில ஆதாரங்கள் தரட்டுமா? தமிழகமா? தமிழ்நாடா? இங்கே உறுத்துவது நாடு என்ற அங்கீகார சொல்தான்.... இந்திய நாட்டுக்குள் ஒரு நாடா? பிரதேசம் என்றாலும் நாடு என்றுதான் பொருள் எனவே மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், எல்லாம் "மத்தியபிர", "உத்திரபிர" என பெயர் மாற்ற வேண்டும்... ஆந்திரப் பிரதேசம் என்ன தக்காளி தொக்கா? அதையும் மாற்றவேண்டும்... ஜார்க்கண்ட் என்பதும் நாடு என்றுதான் பொருள்... கண்ட் என்றால் அவர்கள் தாய்மொழியான சந்தாளி மொழியில் நாடு என்றுதான் பொருள். எனவே "கண்ட்" கட்... அட நம்ப பங்காளி கர்நாடகம்கூட இனி கர்ர்ர்ர் மட்டும்தான்... நாடு ரிமூவ்... நாடு என்றால் நாடற்றவர்களுக்கு எரியதான் செய்யும் என்று சீமான் பேசுகிறார்... ஒருவேளை உண்மைதானோ... ? கஷ்டப்பட்டு சமைத்த கத்தரிக்காய் கூட்டு, அடுப்பு சூட்டில் வேர்வைச்சொட்ட ஆக்கப்பட்ட அரிசிசோறு, பக்குவமாய் செய்த பருப்பு குழம்பு.. செய்து முடித்...
- Get link
- X
- Other Apps
_1662364802922.png)
பழந்தமிழ் போர்வீரர்களின் அமைப்பு பழந்தமிழ் போர்வீரர்களின் உடை கருவிகள் அமைப்பு (கல்வெட்டு: தாராபுரம்) திருப்பூர் பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள் எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்ற...
- Get link
- X
- Other Apps

அரச்சலூர் இசை கல்வெட்டு உலகின் முதல் இசைக் கல்வெட்டு - அறச்சலூர் இசைக்கல்வெட்டு அறச்சலூர் இசைக்கல்வெட்டு, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் (சில இடங்களில் அரச்சலூர் எனவும் குறிப்பிடப்படுகிறது) என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் சிற்றூர். இவ்வூர் காங்கேயம் ஈரோடு சாலையில் இந்த சிற்றூர் அமையப்பட்டுள்ளது. கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்கள் செதுக்கப்பட்டவை. அறச்சலூர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு பாறைகள் நிறைந்திருக்கின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண ...
தமிழ் கடவுள்
- Get link
- X
- Other Apps
.jpeg)
தமிழ் கடவுள் ஓவியங்கள் ஓவியம் 1 - தமிழ் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமேனி திருமேனி சார்ந்த ஓவியம் திருமேனி சார்ந்த ஓவியம் தலைப்பு: பெரும் பெயர் முருகன் ___________________________________________________ ஓவியம் 2 - தமிழ் கொற்றவையின் இளம் கொற்றி வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமேனி கொற்றவை திருமேனி வடிவம் திருமேனி சார்ந்த ஓவியம் தலைப்பு - கொடுங்காட்டு கொற்றி கொற்றவை KOTRAVAI Murugan